spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஜே.பி நட்டா

பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு – ஜே.பி நட்டா

-

- Advertisement -

பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் தேர்வு செய்வது மற்றும் உட்கட்சி தேர்தல் குறித்து தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்களுடன் பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டா டெல்லியில் ஆலோசனை!பாஜகவின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்த விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு - ஜே.பி நட்டாபாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவராக உள்ள ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் விரைவில் நிறைவடைய உள்ளது. இவர் மத்திய அமைச்சராகவும் உள்ளார். மே மாதம் இரண்டாவது வாரத்திற்குள் பாரதிய ஜனதா கட்சியின் புதிய தேசிய தலைவர் நியமனம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப் படும் நிலையில் இன்று பாஜகவின் தேசிய தலைவர் ஜே.பி நட்டா தலைமையில் பாஜக தேசிய பொதுச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதில், பாஜக தேசிய பொதுச் செயலாளர்களான தருண் சக், அருண் சிங், வினோத் தவ்டே, துஷ்யந்த் கௌதம், ஷிவ் பிரகாஷ் சுக்லா, சுனில் பன்சால் மற்றும் பி.எல். சந்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைபெறும் உட்கட்சி தேர்தல் மற்றும் தற்போதைய அரசியல் சூழல்கள் குறித்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி  நட்டா பொதுச் செயலாளர்களுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.

தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமையாக்கம்…முதல்வர் பரிசளிப்பு!

we-r-hiring

MUST READ