தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களை சந்தித்தார்.

அப்போது தேனி மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட தலைமைக்கழகம், மாவட்டம், பொதுக்குழு மற்றும் நகர், ஒன்றியம், பேரூர், சார்பு அணி நிர்வாகிகள் என ஏராளமானோர் ஓ.பி.எஸ்-ஸை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
அதிமுகவில் உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் இரு அணியை சேர்ந்தவர்களும் மாறி மாறி அணி மாறி வரும் நிகழ்வு அண்மைகாலமாக அரங்கேறி வருகிறது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கைலாசபட்டியில் உள்ள பண்ணை வீட்டில் அதிமுக தேனி மாவட்டச் செயலாளர்
தலைமையில் ஓ. பன்னீர்செல்வத்தால் புதிதாக நியமிக்கப்பட்ட நிர்வாகிகளான நகர் கழகம், பேரூர் கழகம், மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் நேரில் வந்து சந்தித்து மரியாதை செலுத்திச் சென்றனர்.