ஈரோடு இடைத்தேர்தலில் ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் செந்தில் முருகன் போட்டியில்லை என என ஓபிஎஸ் ஆதரவாளர் கு.ப. கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய கு.ப.கிருஷ்ணன், “இரட்டை இலை சின்னம் முடக்கப்பட கூடாது என்பதற்காக வேட்பாளர் வாபஸ் பெற்றுள்ளார். ஈரோடு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற பிரச்சாரம் செய்வோம். ஓபிஎஸ் முதல் அடிமட்ட தொண்டர் வரை அனைவரும் பிரச்சாரம் மேற்கொள்வோம்” எனக் கூறினார்.
பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் ஈரோடு கிழக்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக எடப்பாடி அணியில் கே எஸ் தென்னரசு, ஓபிஎஸ் அணியில் செந்தில் முருகன் ஆகியோர் போட்டியிடுவதாக அறிவித்திருந்தனர். இதே போல் நாம் தமிழர், தேமுதிக, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து களம் இறங்கி உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.
