Homeசெய்திகள்அரசியல்ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை... எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு!

ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கோரிக்கை… எடப்பாடி பழனிசாமி தரப்பு எதிர்ப்பு!

-

 

OPS

அ.தி.மு.க. பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் நாளை (நவ.28) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், விசாரணையை ஒருவாரம் ஒத்திவைக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

ஹரி இயக்கும் விஷால் 34 படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு!

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் கௌதம் சிவசங்கர் மூலம் உச்சநீதிமன்றத்தின் பதிவாளரிடம் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில், தனிப்பட்ட காரணங்களால், வழக்கு விசாரணையை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. நீதிபதிகளுக்கு அசௌகரியம் ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே ஒத்திவைப்பு கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அதே நேரம், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்சநீதிமன்ற பதிவாளரிடம் வழங்கப்பட்டுள்ள கடிதத்தில் உச்சநீதிமன்ற வழக்கை மேற்கோள் காட்டி, கீழமை நீதிமன்றங்களை பல வழக்கு விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த வழக்குகளின் விசாரணைகளைத் தாமதிக்கும் நோக்கத்துடனே பொதுக்குழு மேல்முறையீட்டு மனு விசாரணையை ஒத்திவைக்க ஓ.பன்னீர்செல்வம் தரப்புக் கோருவதாக எடப்பாடி பழனிசாமி தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பற்றி எரியும் பருத்திவீரன் விவகாரம்… ஞானவேல் ராஜாவை எச்சரித்த பொன்வண்ணன்!

கடந்த ஆண்டு ஜூலை 11- ஆம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு நாளை (நவ.28) விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் வழக்கு விசாரணையை ஒத்திவைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

MUST READ