ஓபிஎஸ் நீக்கம் செல்லும்- பொள்ளாச்சி ஜெயராமன்
அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம் ஓபிஎஸ் நீக்கம் செல்லும் என அதிமுக எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்தது. மேலும் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தெரிவித்தது.
இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், “அதிமுக என்றால் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி பழனிசாமி என்றால் அதிமுக. இனிமேல் ஏறுமுகம்தான், அதிமுக பெயரை வேறு யாரும் பயன்படுத்தினால் கிரிமினல் கேஸ் போடுவோம். அதிமுக பெயரையோ, சின்னத்தையோ இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும் என பொள்ளாச்சி ஜெயராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திமுக கட்சி கொடியை இனி வேறு யாராவது பயன்படுத்தினால் வழக்கு தொடரப்படும். ஓ.பி.எஸ் & சசிகலா உள்ளிட்ட எவரும் அனுமதியின்றி அதிமுக பெயர் மற்றும் சின்னத்தை பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும்” எனக் கூறினார்.