Homeசெய்திகள்அரசியல்இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி

இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி

-

இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி
நர்மதா ஆற்றின் கரையில் வழிபாடு செய்த பிரியங்கா காந்தி

மத்தியப் பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றின் கரையில் வழிபாடு நடத்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய  பிரியங்கா காந்தி – 2 லட்சம் பேர் கலந்து கொள்ளும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றவுள்ளார்.

இந்தியாவின் மையத்தில் அமைந்துள்ள மாநிலமான மத்தியப் பிரதேச மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சித் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் முதலமைச்சராக சிவராஜ் சிங் சவுகான் உள்ளார். மத்தியப் பிரதேச மாநில சட்டமன்றத்திற்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தேர்தலுக்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது.

முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் கர்நாடக மாநிலத்தைப் போல பெருவாரியாக இடங்களை பெற்று காங்கிரஸ் ஆட்சி அமைக்கும் என ராகுல் காந்தி உறுதியாக தெரிவித்துள்ள சூழலில் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்னதாகவே இன்று முதல் பிரியங்கா காந்தி தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் சென்ற பிரியங்கா காந்தியை மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் கமல் நாத் வரவேற்றார். தொடர்ந்து நர்மதா நதியில் தீப ஆராதனை காட்டி வழிபட்ட பிறகு பிரியங்கா காந்தி பிரச்சாரத்தை தொடங்கினார். நர்மதா நதியில் வழிபாடு நடத்திய பிறகு குவாரிகட் செல்லும் பிரியங்கா காந்தி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார்.

இன்று முதல் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி
தீப ஆராதனை காட்டிய பிரியங்கா காந்தி

இக்கூட்டத்தில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுமார் 2 லட்சம் காங்கிரஸ் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

MUST READ