Homeசெய்திகள்அரசியல்முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?

முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?

-

முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?
முருகன் அண்ணாமலை

வேட்டி கட்டிய தமிழர் பிரதமராகப் போகிறார் என்ற பேச்சு நெடுங்காலமாகவே இருந்து வருகிறது. காமராஜர் ஜி.கே. மூப்பனாருக்கு பின்னர் ப.சிதம்பரம் அந்த சலசலப்பை ஏற்படுத்தி இருந்தார். இப்போது தமிழர் ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்று பேசி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறார் அமித்ஷா.

முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?
காமராஜர்

என்னதான் வட மாநிலங்களில் பாஜக கோலோச்சி வந்தாலும் தென் மாநிலங்களில் இருந்த ஒன்றையும் இழந்து நிற்கிறது. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கர்நாடக மாநிலத்தையும் இழந்து விட்டது பாஜக. இதனால் தென்மாநிலங்களில் பாஜக அதிகம் கவனம் செலுத்தி வருவது தமிழகத்தில் தான்.தமிழகத்தை தான் பாஜக குறி வைத்து காய் நகர்த்தி வருகிறது. அதற்கு ஏதுவாக அதிமுக தங்களது பிரிவு நிலையால் பாஜகவுக்கு அந்த வாய்ப்பை அளித்து வருகிறது. அதிமுகவில் இருக்கும் பிரிவை பயன்படுத்திக் கொண்டு விஸ்வரூப பாய்ச்சலை காட்டி வருகிறது பாஜக. அதற்கு தகுந்தபடி அண்ணாமலையின் வேகமும் இருப்பதால் எப்படியும் தமிழகத்தை பிடித்து விடலாம் என்று கணக்கு போடுகிறது பாஜக.

முருகனா? அண்ணாமலையா? பிரதமராகப்போகும் தமிழர் யார்?
ஜிகே மூப்பனார்

இதனால் தான் தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் மோடியும் , அமித்ஷாவும் தமிழர் குறித்து அதிகம் பேசி வருகிறார்கள். தற்போது இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் சென்னையில் கோவிலம்பாக்கத்தில் நடந்த தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி பாஜக நிர்வாகிகளுடன் கலந்துரையாடிய போது , ’’ தமிழகத்தில் முதல்வராக வேண்டும் என்று மட்டுமே நினைத்துக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் இருந்து ஒருவர் இந்த நாட்டின்
பிரதமராக வரவேண்டும் என்று நினைக்க வேண்டும். ஏழை குடும்பத்தில் பிறந்த ஒருவரை பிரதமராக்க வேண்டும். இது பாஜகவால்தான் சாத்தியமாகும். இதற்கு அனைவரும் உறுதி ஏற்க வேண்டும்தமிழகத்தைச் சேர்ந்த காமராஜரும் , ஜிகே முப்பனாரும் பிரதமராகும் வாய்ப்பு உருவானது . அதை திமுக தான் கெடுத்தது.

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
அமித்ஷா

அதற்கு அடுத்ததாக யாருக்கும் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் வரும் காலங்களில் தமிழகத்தில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும். ஏழை குடும்பத்தில் இருந்து ஒருவரை பிரதமராக அரியணை ஏற்ற வேண்டும் என்ற என்கிற எண்ணத்தை நாம் உழைக்க வேண்டும். ஏழை தமிழர் ஒருவர் பிரதமர் என்பது பாஜகவால் மட்டுமே சாத்தியம்’’ என்று சொன்னது, தமிழக அரசியலில் பெரும் சலசலப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.

அண்ணாமலை மந்திரத்தை அமித்ஷா ஓதியது ஏன்? 25 பாஜக எம்பிக்கள் தமிழகத்தில் இருந்து டெல்லி செல்ல முடியுமா?
அமித்ஷா பேச்சு

அமித்ஷாவின் இந்த பேச்சு தமிழக அரசியலில் பெரும் விவாதத்தை தொடங்கி வைத்திருக்கிறது. அமித்ஷாவின் கருத்துக்கு ஆதரவும் எதிர்ப்பும் வலுத்து வருகிறது. ’’ஒரு துரும்பை கூட தமிழ்நாட்டிற்கு பாஜக தரவில்லை. ஆனால் மிழகத்திற்கு வந்து உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களை உள்துறை அமைச்சர் சொல்வது மிகவும் தவறு. ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒரு தமிழர் பிரதமராக வருவார் என்று சொல்கிறார். அது அண்ணாமலையா? அல்லது முருகனா? யாரை கொண்டாட போகிறீர்கள்?’’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி. அவர் மேலும், ’’அண்ணாமலை போன்றவர்கள் பொய் சொல்லலாம். ஆனால்
உள்துறை அமைச்சர் இப்படி பொய் சொல்லக்கூடாது. முதலில் தமிழ்நாட்டிற்கு ஏதாவது செய்யுங்கள். செய்துவிட்டு பிறகு பேசுங்கள்’’என்று ஆத்திரப்பட்டிருக்கிறார்.

ks alagiri

காங்கிரசிலில் இருந்து இப்படி காட்டமாக பதில் வந்திருக்கும் நிலையில், கூட்டணியில் இருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இது குறித்து திருவள்ளூரில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ’’தமிழகத்திலிருந்து ஒரு பிரதமரை உருவாக்குவோம் என்று அமித்ஷா பேசியிருப்பது
மக்களை ஏமாற்றுவதற்கான செயல். உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் இந்த பேச்சுக்கு தமிழர்கள் மயங்க மாட்டார்கள். கர்நாடகாவில் பிரதமர் ஐந்து இடங்களில் பிரச்சாரம் செய்தும் பாஜகவால் ஆட்சியை கைப்பற்ற முடியவில்லை. தமிழக வாக்காளர்கள் பக்குவம் அடைந்தவர்கள். ஏமாற்ற முடியாது’’
என்கிறார்.

தலித் என்பது ஒரு சாதியின் பெயரல்ல - திருமாவளவன்

பாஜக மூத்த நிர்வாகிகள் பலரும் ஆளுநர் ஆகிக் கொண்டிருப்பதால், தமிழக பாஜகவில் இருந்து ஒருவர் பிரதமர் வேட்பாளர் ஆகும் வாய்ப்பும் இருக்கிறது என்ற சலசலப்பும் அதிகரித்து வருகிறது.

MUST READ