spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி பெண் எஸ்பி

புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி பெண் எஸ்பி

-

- Advertisement -

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்தில் பாதுகாப்பு விதிகளை கட்சியினர் மீறியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.புஸ்ஸி ஆனந்தை எச்சரித்த புதுச்சேரி பெண் எஸ்பி

புதுச்சேரியில் விஜய் பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்துக்குள் முண்டியடித்துச் சென்ற தவெகவினரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. க்யூ ஆர் கோட் உள்ளவர்கள் மட்டுமே தொடக்கத்தில் மைதானத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.  காவல்துறை தரப்பில் தவெக பொதுக் கூட்டத்துக்கு 5,000 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில் தவெக தரப்பில் பொதுமக்களுக்கு நேற்று பாஸ் வழங்கப்பட்ட பொழுது ஒரு பாசில் இரண்டு பேர் கூட்டத்தில் பங்கேற்கலாம் என உறுதி அளித்துள்ளனர்.

we-r-hiring

இந்த நிலையில் காலையிலிருந்து ஒரு பாஸ் உள்ளவர்கள் தன்னுடன் மற்றொருவரை அழைத்து வந்துள்ளனர். இதனை கண்டறிந்த காவல்துறை பாஸ் வைத்துள்ள ஒருவரை மட்டுமே உள்ளே அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர். மேலும், பாஸ் இல்லாதவர்களை மைதானத்தை விட்டு வெளியே செல்லும்படி காவலர்கள் அனுப்பி வைத்துள்ளனர்.

இருதரப்பினருக்குமிடையே வாக்குவாதம் முற்றிய நிலையில், போலீஸ் பாதுகாப்பை மீறி நுழைவாயில் கேட் மீது ஏறி குதிக்க முயன்றதால் போலீசாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. க்யூ ஆர் கோட் அட்டை இல்லாதவர்களும் பலத்த பாதுகாப்பையும் மீறி பொதுக்கூட்ட மைதானத்துக்குள் சென்றனர். தவெகவினர் முண்டியடித்துச் சென்றதால் போலீசாரால் எந்தவித  சோதனையும் மேற்கொள்ள முடியவில்லை.

இந்நிலையில், கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே அனுமதிக்க வேண்டும் என ஆனந்த் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போலீஸ் என்ன செய்ய வேண்டும் என தவெகவின் கூற கூடாது என புதுச்சேரி காவல் அதிகாரி ஈஷா சிங் எச்சரித்துள்ளாா். ஏறி குதித்து செல்லும் தவெக தொண்டர்களை புதுச்சேரி போலீசார் விரட்டிச் சென்று ஒழுங்குப்படுத்தி வருகின்றனர்.

ஓபிஎஸ் டிமாண்ட் ஏறிடுச்சு! அமித்ஷா இதை எதிர்பார்க்கல! டெல்லி டீல் ரகசியம்! உமாபதி நேர்காணல்!

 

MUST READ