Homeசெய்திகள்அரசியல்அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்

அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்

-

அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்- ஆர்.பி.உதயகுமார்

எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்த திமுக அரசை கண்டித்து மதுரை பழங்காநத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ மற்றும் மதுரை மாநகர் புறநகர் மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

உதயகுமார்

ஆர்ப்பாட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.பி.உதயகுமார், “எடப்பாடி பழனிசாமியை மதுரை விமான நிலையத்தில் வைத்து அவதூறாக பேசிய நபர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் வெறும் டிரைலர் தான்..திமுகவின் பூச்சாண்டிக்கெல்லாம் அதிமுக ஒருபோதும் பயப்படாது. சர்வாதிகாரபோக்கு தொடர்ந்தால் திமுக அரசுக்கு அதிமுகவினர் உரிய பதிலடி கொடுப்பார்கள். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத ஸ்டாலின், அதிமுகவின் திட்டங்களை தொடங்கிவைத்து பொம்மை முதலமைச்சராக உள்ளார். அதிமுகவினர் மனித வெடிகுண்டாக மாறுவோம்” எனக் கூறினார்.

தொடர்ந்து பேசிய செல்லூர்ராஜூ, விடியா அரசு தனது கையாலாகாத தனத்தை மறைக்கவே எதிர்க்கட்சி தலைவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.

 

MUST READ