spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்விரைவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்- சசிகலா

விரைவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்க திட்டமிட்டுள்ளேன்- சசிகலா

-

- Advertisement -

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜிஆரின் 106வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு சசிகலா தி.நகர் தனது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆர் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

sasikala

we-r-hiring

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சசிகலா, “ஆரம்பத்தில் இருந்து என்னோட உத்தியை பார்த்துட்டு இருக்கீங்க. இதுக்கு மேல நான் வெளிய சொல்ல கூடாது. ஆளுநரிடம் சண்டையிட்டு கொண்டே இருந்தால், மக்களுக்கு திமுக எவ்வாறு நன்மை செய்ய முடியும்? திமுகவை தோற்கடிக்க வேண்டுமென்றால், அதிமுக ஒன்றுபட வேண்டும். ஆளுநர் உரையை முதலில் தயார் செய்து ஆளுநர் மாளிகைக்கு அனுப்ப வேண்டும். அதில் அவர் திருத்தம் செய்தவுடன், அதனையெல்லாம் திருத்தி இரண்டாவது முறை ஆளுநருக்கு அனுப்ப வேண்டும். திமுக அரசு ஒரு முறை ஆளுநருக்கு உரையை அனுப்பினார்களா? அல்லது இரண்டு முறை அனுப்பினார்களா? என தெரியவில்லை. விரைவில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை சந்திக்க திட்டமிட்டுள்ளேன். எங்க கட்சியினரை பார்ப்பது குற்றமா?

ஜெயலலிதா இருக்கும்போது, அவர் சொல்வரைதான் ஆளுநர் கேட்பார். ஜெயலலிதாவும், எம்ஜிஆரும் ஒருநாளும் மக்களை ஏமாற்ற நினைத்தது இல்லை. திமுகவுக்கு தக்க பாடம் கற்பிக்கப்படும். ஜல்லிக்கட்டு வர காரணமாக இருந்தது அதிமுக ஆட்சி தான்.” எனக் கூறினார்.

MUST READ