spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது- சசிகலா

அதிமுகவுக்கும் எனக்கும் சொந்தமில்லை என யாராலும் சொல்ல முடியாது- சசிகலா

-

- Advertisement -

சென்னை, மெரினாவில் உள்ள எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் ஆதரவாளர்களுடன் சசிகலா மரியாதை செலுத்தினார்.

sasikala

எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் மரியாதை செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, “அதிமுக யாருக்கு சொந்தம் என தொண்டர்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.அதிமுக தொண்டர்களின் முடிவு அடிப்படையில் எல்லாமே நடக்கும்” எனக் கூறினார்.

we-r-hiring

முன்னதாக நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சசிகலா, அதிமுகவை ஒன்றிணைக்க தேவையான பணிகளை தொடங்கிவிட்டேன். விரைவில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என தெரிவித்திருந்தார். இந்த சூழலில் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சசிகலாவுக்கும் கழகத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை, எந்த நிலையிலும் அதிமுக தலைமையில் தான் கூட்டணி,கழக மெகா கூட்டணியில் சசிகலா, தினகரன், பன்னீர் செல்வத்தை இணைக்க மாட்டோம்” எனக் கூறியிருந்தது குறிப்பிடதக்கது.

MUST READ