spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் செல்வப்பெருந்தகை?

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் செல்வப்பெருந்தகை?

-

- Advertisement -

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகிறார் செல்வப்பெருந்தகை?

நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கே.எஸ்.அழகிரி

2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே.எஸ்.அழகிரி பதவி வகித்து வருகிறார். 5 ஆண்டுகாலம் பதவியில் உள்ள கே.எஸ்.அழகிரி மாற்றப்பட்டு இன்று மாலை அறிவிப்பு வெளியாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநில தலைவர் மாற்றம் தொடர்பாக கடந்த ஜூன் மாதமே டெல்லியில் ஆலோசனை நடைபெற்றது.

we-r-hiring

இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் பதவிக்கு செல்வப் பெருந்தகை, ஜோதிமணி, மாணிக்கம் தாக்கூர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில் செல்வப்பெருந்தகை தலைவராக நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செல்வப்பெருந்தகைக்கு பதில் சட்டமன்ற காங்கிரஸ் குழு தலைவராக ஈ.வி.கே.எஸ். இளாங்கோவன் நியமிக்கப்படலாம். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால் கட்சி நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் வகையில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அண்மையில் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆகவே வயது முதிர்வை கருத்தில் கொண்டும், தேர்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமே காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாற்றப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

MUST READ