‘‘இறை நம்பிக்கை இல்லாதவராயினும், மாற்று இறை நம்பிக்கை கொண்டவராயினும் இறை நம்பிக்கை உடையவர்களின் நம்பிக்கையை உடைக்கும் வகையில் இசைவாணி பாடியது ஏற்புடையதல்ல. ஐயப்ப பக்தர்களின் மனத காயப்படுத்திய பாடகி இசைவாணியை கைது செய்ய வேண்டும் என சென்ன உயர்நீதி மன்ற மதுரை கிளை வழக்கறிஞர் இளவரசன், திருப்புவனம் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அய்யப்பனை மோசமாக விமர்சித்து பாடிய இசைவாணி விவகாரத்தில் புகார்கள் இருந்தும், அரசு தரப்பில் ஏன் இது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊடகத்தினரும், பொதுமக்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‛‛ஐ ஆம் சாரி ஐயப்பா.. நான் உள்ளே வந்தால் என்னப்பா.. பயம்காட்டி அடக்கி வைக்க பழைய காலம் இல்லப்பா.. நான் தாடிக்காரன் பேத்தி.. இப்போ காலம் மாறிப்போச்சி” என்கிற அந்தப்பாடலில், ‘‘தீட்டான துப்பட்டா உன் சடங்கை காரித்துப்பட்ட..” என்கிற வரிகள் இன்னும் கொதிப்படையச் செய்துள்ளது.
இந்நிலையில் வழக்கறிஞர் இளவரசன் கொடுத்துள்ள புகார் மனுவில், ‘‘கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் ஸ்ரீஜயப்பன் பற்றியும், சமூக சீர்திருத்தவாதி பெரியார் பற்றியும் தவறுதலான கடும் சொற்களுடன் கூடிய கருத்துக்கள் பதிவாகி வருகின்றன. இதற்கு மூலகாரணம் என்னவென்று ஆராய்ந்த பொழுது சிலர் தமது சுய லாபத்திற்காகவும், விளம்பர யுக்திக்காகவும் ஒரு மதத்தையோ, ஜாதியையோ அவதூறு செய்து வலையதளங்களில் சித்தரித்து வருகின்றனர். அதில் ஒன்றுதான் தற்பொழுது சமூகதளத்தில் ‘‘ஐ ஆம் சாரி ஐயப்பா’’ என்ற குமுற வைக்கும் பாடல். இசைவாணி என்ற பெண்மணி ஸ்ரீ ஐயப்பன் கோவில் பற்றி தவறான புரிதலுடன் பாடியுள்ளார். இச்செயலானது இந்து மக்களின் புனிதத்தை அவமரியாதை செய்யும் விதமாக உள்ளது.
இசையாணி என்பவர் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். இவர் எதற்காக இந்து மத கோவிலுக்கு நுழைய வேண்டும் என்கிற நோக்கத்தில் அந்த பாடல் பாடியுள்ளார்? இதே போன்று ஏற்கெனவே நடிகை கஸ்தூரி ஒரு குறிப்பிட்ட சமுதயாத்தினரை இழிவாக பேசியதாக கைது செய்யப்பட்டார். அவர் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீனில் மாண்புமிகு நீதியரசரால் விடுவிக்கபட்டுள்ளார்.
தற்போது இசைவாணி பாடிய பாடலுக்கு ஐயப்ப பக்தர்கள் சார்பாக தந்தை பெரியாரை தாக்கி பாடலும் வெளிவந்துள்ளது. இந்த மத நல்லிணக்க சித்தனையை, நம்பிக்கையை உடைக்கும் மேற்படி பாடலை பாடிய இளசவாளணி மீது கடுமையான நடவடிக்கை வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இனிவரும் காலங்களில் இதுபோன்று மதநம்பிக்கையை கெடுக்கும் நபர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும் என்பதே என்னுடைய ஆதங்கமாகும்’’ எனத் தெரிவித்துள்ளார்.
‘‘அரசின் செயல்பாட்டை எல்லாரும் புரிந்து கொள்ளலாம். புகார்கள் இருந்தாலும், தமிழக அரசால் அனைவர் மீதும் ஒரே மாதிரியான நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உள்ளது போலும். புகார் என்றதும், நடவடிக்கை எடுப்பதில் என் மீது காட்டிய அக்கறையை, மற்றவர்கள் மீது காட்ட முடியாத சூழலில் தான் தமிழக அரசு உள்ளது’’ என நடிகை கஸ்தூரி ஆதங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.


