டெல்டா மாவட்டங்களில் 2025 தொடக்கத்தில் முக்கிய முடிவுகளை எடுக்க ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது.
தஞ்சாவூர், மன்னார்குடி, புதுக்கோட்டை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை சேர்ந்த ஓபிஎஸ் அணியில் உள்ள முக்கிய நிர்வாகிகள், ‘‘அவருடன் இருந்தால் அரசியல் வாழ்க்கை இனி எப்படி இருக்கும் என தெரியவில்லை’’ என புலம்பி வருகிறார்கள். ஓபிஎஸை நேரிடையாக சந்தித்தும் நிர்வாகிகள் முறையிட்டுள்ளனர். ஆனால், வழக்கம் போல் வரும் ஆண்டு நமக்கான ஆண்டு இருக்கும் எனக்கூறி நிர்வாகிகளை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் இப்படித்தான் நிர்வாகிகளை ஓ.பி.எஸ் சமாதானம் செய்து வருவதை வாடிக்கையாக தொடர்ந்து வருகிறார். எப்படியும் பாஜக தமக்காக ஒரு நல்ல வழியைக் காட்டும் என இன்னும் இன்னும் நம்பி இருக்கிறார் ஓபிஎஸ். 2025ம் ஆண்டு ஓபிஎஸ்க்கு அவர் எதிர்பார்த்தப்படி நடக்கா விட்டால், அதன்பிறகு முக்கிய முடிவு செய்துள்ளனர்.
எதுவும் நடக்காமல் இப்படியே இருந்து விட்டால் ஓபிஎஸை விட்டு விலகி மாற்று கட்சிக்கு செல்வதற்கான வேலைகளையும் திரைமறைவில் கச்சிதமாக முடித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த விஷயமும் ஓபிஎஸ் கவனத்தக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 2025 ல் ஓபிஎஸ் அணியில் மாற்றம் ஏற்படுமா? அவரது நம்பிக்கை பலிக்குமா? எனக் காத்திருக்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.