தமிழகத்தில் விண்வெளி தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு, அரசின் சார்பில் அளிக்க கூடிய சலுகைகள் அடங்கிய வரைவு தொழில் கொள்கையை, டிட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடரில் தொழில் மற்று முதலீட்டு துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, ” தமிழ்நாடு, தானியங்கி மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரிபாகங்கள், ஜவுளி, கனரக இயந்திரங்கள், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல், வன்பொருள் போன்ற துறைகளில் சிறந்த வளர்ச்சி பெற்று தொடர்ந்து தொழில்மயமான மாநிலமாக விளங்கி வருகிறது.
திருப்பூர் அருகே தண்டவாளத்தை கடக்க முயன்ற 2 பேர் ரயில் மோதி உயிரிழப்பு!
தற்போது, வானூர்தி மற்றும் பாதுகாப்புத் துறையில் பெரும் முதலீடுகளை ஈர்த்து வருவதன் தொடர்ச்சியாக மேலும் இத்துறை சார்ந்த பன்னாட்டு நிறுவனங்களை ஈர்த்து அதிகளவிலான முதலீடுகளை பெறும் நோக்கில் தமிழ்நாடு விண்வெளி தொழில் கொள்கை (Space Tech Policy) வெளியிடப்படும் மாநிலத்தில் விண்வெளித் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உதவும் வகையில் வழிமுறைகள் மற்றும் தொலைநோக்கு திட்டங்கள் இக்கொள்கையில் வகுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன்படி, தமிழகத்தில் விண்வெளி தொழிலில் ஈடுபடும் நிறுவனங்களுக்கு, அரசின் சார்பில் அளிக்க கூடிய சலுகைகள் அடங்கிய வரைவு தொழில் கொள்கையை, டிட்கோ நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், இந்தாண்டு ஏப்., முதல், விண்வெளி துறையில் புதிய மற்றும் விரிவாக்க தொழில் துவங்கும் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ரூ.300 கோடிக்கு மேல் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு, மூலதன மானியம், சலுகை விலையில் நிலம் உள்ளிட்ட சலுகைகள் , ‘ஏ’பிரிவில் உள்ள சென்னை மற்றும் அதை சுற்றிய நான்கு மாவட்டங்களில் ஐந்து சதவீத மூலதன மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்
‘பி’ பிரிவில் உள்ளிட்ட (கோவை, ஈரோடு உட்பட 12 மாவட்டங்களில் ஏழு சதவீதம் மானியம், ஐந்து ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
‘சி’ பிரிவில் உள்ள தர்மபுரி, கன்னியாகுமரி உள்ளிட்ட 19 மாவட்டங்கள்பத்து சதவீத மானியம், பத்து ஆண்டுகள் வழங்கப்படும்.
‘டி’ பிரிவு மதுரை, துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் (Space bay) விண்வெளி தொழில் விரிவாக்கா மாவட்டங்களாக அறிவிக்கப்படும் . இவறில் பத்து சதவீதம் மூலதன மானியம், ஏழு ஆண்டுகளுக்கு வழங்கப்படும்.
‘ஏ, பி’ பிரிவில் இடம்பெறும் மாவட்டங்களில் உள்ள, ‘சிப்காட், சிட்கோ, டிட்கோ’ உள்ளிட்ட தொழில் பூங்காக்களில் முதலீடு செய்தால், நிலத்தின் மதிப்பில், 20 சதவீதம் சலுகை வழங்கப்படும்.
‘சி, டி’ பிரிவில் உள்ள மாவட்டங்களில் தொழில் துவங்கினால், 50 சதவீதம் சலுகை விலையில் நிலம் வழங்கப்படும்.
நிலம் வாங்கும்போது, 100 சதவீத முத்திரை தாள் கட்டண தள்ளுபடி கிடைக்கும்; ஐந்து ஆண்டுகளுக்கு மின்சார வரியில் இருந்து, 100 சதவீத விலக்கு அளிக்கப்படும்.
ஆலையில் சூரியசக்தி மின் நிலையம் உள்ளிட்ட பசுமை திட்டங்களை செயல்படுத்தும் மதிப்பில், 25 சதவீதம் மானியம் வழங்கப்படும்.
பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்க ஒருவருக்கு மாதம், 10,000 ரூபாய் என, ஆண்டுக்கு, 50 நபருக்கு பயிற்சி அளிக்க உதவி தொகை வழங்கப்படும்.
உள்ளிட்ட கருத்துகள் இந்த வரைவு கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தரப்பினரும் இது குறித்த தங்களின் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரோ நிறுவனம் தனது 2-வது ஏவுதளத்தை அமைத்து வரும் குலசேகரன்பட்டினத்திற்கு அருகில் 1,500 ஏக்கரில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்கும் பணியை தொழில்துறை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.