Homeசெய்திகள்அரசியல்அடக்கு முறைக்கு தமிழ் நாடு ஒருபோதும் அடிப்பணியாது – கார்கே

அடக்கு முறைக்கு தமிழ் நாடு ஒருபோதும் அடிப்பணியாது – கார்கே

-

- Advertisement -

தமிழ் நாடு ஒருபோதும் அடக்குமுறைக்கு அடிப்பணியாது என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளாா்.அடக்கு முறைக்கு தமிழ் நாடு ஒருபோதும் அடிப்பணியாது – கார்கேதமிழகத்தில் சட்டமன்றத் தோ்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், பல்வேறு கட்சியினரும் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில், காங்கிரஸ் தேசியத் தலைவா் மல்லிகார்ஜூன கார்கே, “தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிராக இந்தியாவிலேயே முதலில் எதிா்த்து குரல் கொடுத்தவா் தமிழ் நாடு முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் தான். தொகுதி மறுவரையறை மசோதாவை வீழ்த்தியது ஒரு சாதாரண வெற்றி அல்ல.

தமிழ் நாட்டில் இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போது ஒன்றிய பாஜக அரசு நிதி வழங்கவில்லை.  தமிழ் நாட்டுக்கு திருப்பி வழங்கப்படும் நிதி குறைவாகத்தான் உள்ளது. நிதி தராமல் தமிழ் நாட்டின் வளா்ச்சியை பாஜக தடுக்கிறது. தமிழ்நாட்டிற்கான கல்விநிதியைக் கூட தராமல் ஒன்றிய பாஜக அரசு செயல்படுகிறது. பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதிமுக தனது அடையாளத்தை இழந்துவிட்டது” என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளாா்.

திமுக அரசு “டோக்கன் அரசியல்” மீது நம்பிக்கை வைத்துள்ளது – சசிகலா  விமர்சனம்

we-r-hiring

MUST READ