Homeசெய்திகள்அரசியல்கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி..! புஸ்வானமாகும் புஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு..!

கொடுத்தவனே எடுத்துக் கொண்டாண்டி..! புஸ்வானமாகும் புஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு..!

-

- Advertisement -

கட்சி ஆரம்பிப்பதற்கு முன்பிருந்தே தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய தூணாக விளங்கியவர் புஸ்ஸி ஆனந்த். ஒரே ஒரு ஆடியோவால் அவர் நெருக்கடிக்கு உள்ளான நிலையில் தற்போது கிட்டத்தட்ட ஓரம் கட்டப்பட்டு விட்டதாகவே கூறுகின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள். தவெக ஆண்டு விழா நிகழ்ச்சியால் மேலும் அதிருப்தி அடைந்துள்ளதாக சொல்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.

வழக்கம் போல் இல்லாமல் இந்த நிகழ்ச்சி மேடையில் கட்சியின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் உள்ளிட்ட பலரும் மேடையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். அது மட்டும் அல்லாமல் விஜய்க்கு அடுத்தபடியாக ஆதவ் அர்ஜுனா, பிரசாந்த் கிஷோர், ராஜ்மோகன், உள்ளிட்டோர் வந்தனர். என்ட்ரி கொடுக்கும் போது பிரசாந்த் கிஷோருடன் உள்ளே வந்தார் விஜய். கட்சிக்கு முன்னாலே வந்தாலும், இன்றைய நிகழ்ச்சியில் இவர்கள் அனைவருக்கும் பின்னாலே வந்தவர் தான் கட்சியின் பொதுச் செயலாளரான புஸ்ஸி ஆனந்த்.

விஜய் ரசிகர் மன்றம் மக்கள் இயக்கமாக மாற்றப்பட்ட போது எஸ்.ஏ.சந்திரசேகரிடம் இருந்து கைப்பற்றியவர் புஸ்ஸி ஆனந்த் என குற்றம் சாட்டப்பட்டது. சந்திரசேகர் தனது மகன் விஜயிடம் இருந்து விலகிய நிலையில் கட்சியின் அனைத்து பணிகளையும் புஸ்ஸி ஆனந்த் மட்டுமே கவனித்து வந்தார். விஜய்க்கு இணையாகவே தவெகவினர் ஆனந்தை தான் கொண்டாடி வந்தனர்.

புஸ்ஸி ஆனந்தின் பூர்வீகம் புதுச்சேரி. அங்கு எம்.எல்.ஏ-வாகவும் இருந்தவர் புஸ்ஸி ஆனந்த். புதுச்சேரி மாநிலத்தில் முதல்வராக இருக்கும் ரங்கசாமியுடன் விஜயை அறிமுகம் செய்து வைத்துள்ளார். அப்போது தமிழகத்தில் தவெகவின் வாக்கு வங்கியை வங்கியை அதிகரிக்க ரங்கசாமியின் ஆதரவு தேவை என அவரது முன்னாள் விசுவாசி புஸ்ஸி ஆனந்த் விஜய்க்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

ஆனால், தமிழகத்திலும் தனது கட்சியை விரிவுபடுத்தும் ஆசையில் முதல்கட்ட பணிகளை ஆரம்பித்து விட்டார் ரங்கசாமி. இந்நிலையில், ”எனது ஆலோசனை பெயரில்தான் விஜய் புதிய கட்சியை தொடங்கி நடத்தி வருவதாக புதுச்சேரியில் பரப்பி வருகிறாராம் புஸ்ஸி ஆனந்த்.

ஏற்கனவே அக்கட்சியில் முக்கிய நிர்வாகியாக உள்ள புஸ்ஸி ஆனந்த் மீது அங்குள்ள நிர்வாகிகளுக்கு அதிருப்தி உள்ள நிலையில், அடுத்தடுத்த அவரது செயல்பாடுகள் தமிழக நிர்வாகிகளையும் முணுமுணுக்க வைத்து வருகிறது. இதனால் புதுச்சேரியிலும் புஸ்ஸி ஆனந்தின் செல்வாக்கு படிப்படியாக சரியத் தொடங்கி இருக்கிறது என்கிறார்கள்.

MUST READ