spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்தமிழகத்தில் அரசியல் களம் மாறிவருகிறது - அண்ணாமலை காமெடி

தமிழகத்தில் அரசியல் களம் மாறிவருகிறது – அண்ணாமலை காமெடி

-

- Advertisement -

தமிழகத்தில் அரசியல் களம் நாளுக்கு நாள் மாறிவருகிறது, பாஜகவிற்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது என்று அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை காமெடியாக பேசினார்.

தமிழகத்தில் அரசியல் களம் மாறிவருகிறது - அண்ணாமலை காமெடிசென்னையில் பாஜகவின் பொதுக்குழு கூட்டம் நடந்து வருகிறது. அதில் கலந்துக் கொண்ட அவர் பேசும் போது, தமிழகத்தில் எந்த கட்சி மீதும் இல்லாத அடக்குமுறை பாஜக மீது ஏவப்படுகிறது. இதுவரை இல்லாத அளவு தமிழத்தில்  பாஜக மீது அடக்குமுறை ஏவப்படுகிறது.

we-r-hiring

தமிழக அரசியல் களம் மாறி வருகிறது , பித்துப்பிடித்த ஒரு  குரங்கை தேள் கொட்டி , பிறகு அது கள்ளை குடித்து விட்டு வீதிக்கு வந்தால் எப்படி இருக்குமோ அதுதான் தற்போதைய திமுக ஆட்சி.

ஒரு தேசிய கட்சியின் மாநிலத் தலைவர் நேற்று மாலை வெட்டிக் கொல்லப்படுகிறார், பாஜகவை சேர்ந்த நதியாவின் கணவரும் வெட்டப்பட்டு உயிருக்கு போராடி வருகிறார். இதுவரை இல்லாத அளவு தமிழகத்தில் வன்முறைகள் நடந்து வருகிறது.

கள்ளச்சாராயம் குறித்து காவல்துறைக்கு புகார் தெரிவித்தால் , புகார் தெரிவித்தவர் கூலிப்படை மூலம் கொல்லப்படுகின்றார். அடுத்த 3 ஆண்டில் திமுகவை ஆட்சியிலிருந்து தூக்கி எரிய வேண்டும். 2026 ல் ஏழை, விவசாயிகளுக்கான ஆட்சி அமைய வேண்டும்.

முதலமைச்சரால் கூட்டத்தில் பேச முடிகிறதா..? முதலமைச்சருக்கான திறனுடன் அவர்  இருக்கிறாரா..? முடிவெடுக்கும் திறன் அவருக்கு இருக்கிறதா ..? அவரால் தமிழகத்தை வழிநடத்த முடியுமா என மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

முதலமைச்சர் மருமகன்தான்  கோப்புகளை என்ன செய்ய வேண்டும் என தன் இல்லத்தில் வைத்து முடிவெடுக்கிறார். முதலமைச்சர் வெறும் பொம்மை முதலமைச்சராக இருக்கிறார். மக்களால் தேர்வு செய்யப்படாத ஆதிக்க சக்தி தமிழகத்தை வழிநடத்துவதால் கொலைகள் அதிகரித்து, தமிழக வளர்ச்சி குன்றிவிட்டது. இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

MUST READ