spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்அரசியல்‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி

‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி

-

- Advertisement -

‘அதிமுக பக்கம் நிற்கிறோம்’ பாஜகவை புறக்கணிக்கும் புரட்சி பாரதம் கட்சி

என்.டி.ஏ – இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

ADMK

இதுதொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியதை புரட்சி பாரதம் கட்சி வரவேற்கிறது. சமீப காலமாக திராவிட தலைவர்களையும், அதிமுக மாநாட்டையும் விமர்சித்து வந்த பாஜகவை கண்டித்து, தேசிய ஜனநாயக்கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறியுள்ளது. அதிமுகவின் தலைமையிலான கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சி இயங்கி வரும் நிலையில், அவர்கள் எடுக்கும் முடிவிற்கு நாங்கள் உறுதுணையாக நிற்போம்.

we-r-hiring

அதிமுக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி. பழனிசாமி தலைமையில் அமையும் கூட்டணியில் புரட்சி பாரதம் கட்சியும் ஓர் அங்கம் வகிக்கும் என்பதை கட்சியின் தலைவர் என்ற முறையில் தெரிவித்துக் கொள்கிறேன். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் அமையும் கூட்டணியில் பங்கேற்று புரட்சி பாரதம் கட்சி தேர்தலை எதிர்கொள்ளும். என்.டி.ஏ – இண்டியா என்று எந்த ஒரு கூட்டணியிலும் பங்கேற்காமல், அதிமுக தலைமையில் நாங்கள் தனி கூட்டணி அமைத்து நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம்..!!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ