Homeசெய்திகள்அரசியல்இது சட்டமன்றமா, சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா? - முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

இது சட்டமன்றமா, சினிமா ஷூட்டிங் ஸ்பாட்டா? – முதலமைச்சர் விஜய்யை விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்

-

- Advertisement -

“தற்போதைய முதலமைச்சர் விஜய், சட்டமன்றத்திற்குள் நுழைந்ததும் எந்த ஆங்கிளில் எத்தனை கேமரா இருக்கிறது என்று பார்ப்பதையே வேலையாக வைத்துள்ளார்” என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துள்ளார்.

we-r-hiring

​புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள சுக்கிரன் விடுதியில் நடைபெற்ற திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்றுப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக அரசை மற்றும் முதலமைச்சரை நோக்கிக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

அவரது உரையின் முக்கிய விவரங்கள் பின்வருமாறு: “கேமரா எங்கே என்று தேடும் முதலமைச்சர்!”  முன்பெல்லாம் முதலமைச்சர் அவைக்குள் வந்ததும் எதிர்க்கட்சித் தலைவர்கள், உறுப்பினர்கள் மற்றும் பேரவைத் தலைவரைப் பார்த்து வணக்கம் வைப்பார். ஆனால், இப்போதுள்ள முதலமைச்சர் விஜய், அவைக்குள் வந்தவுடனேயே எந்த ஆங்கிளில் எத்தனை கேமரா இருக்கிறது என்று பார்ப்பதைத்தான் முதல் வேலையாக வைத்திருக்கிறார்.

இதனால், ‘இது சட்டமன்றமா, இல்லை சினிமா தியேட்டரா, அல்லது ஷூட்டிங் ஸ்பாட்டா?’ என்ற சந்தேகம் நமக்கெல்லாம் எழுகிறது. அந்த அளவுக்கு ஆளுங்கட்சியினர் அவையை மாற்றி வைத்துள்ளனர். முதலமைச்சர் தனது ‘ஆக்டிங் பெர்பார்மன்ஸை’ ஒவ்வொரு நாளும் காட்டிக்கொண்டு, அவைக்குள் கதை சொல்கிறேன் என்று உளறிக்கொண்டிருக்கிறார்.”

மக்களின் இதயத்தில் மு.க.ஸ்டாலின்
​”நம்முடைய திமுக தலைவரை (மு.க.ஸ்டாலின்) அவர் தேடிக்கொண்டிருக்கிறாராம். நம் தலைவர் ஒன்றும் தேடிக் கண்டுபிடிக்கும் இடத்தில் இருப்பவர் இல்லை. அவர் எப்போதுமே மக்களோடு மக்களாக இருப்பவர்; மக்களின் இதயத்தில் வாழ்பவர். மிசா காலத்தில் போலீஸ் தேடியபோது, தானாகச் சென்று கைதானவர் நம் தலைவர். ​தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் தில்லாக, தெம்பாகத் தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி சொன்னவர் நம் தலைவர். ஆனால், பெரம்பலூர் தொகுதியில் ஜெயித்தார்களே… இந்த முதலமைச்சர் இதுவரை ஒரு முறையாவது அங்குச் சென்று நன்றி சொன்னாரா? நிச்சயம் கிடையாது.”

திட்டங்களை நிறுத்த பயப்படும் “சோபா மாடல்” அரசு
​”கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண் திட்டம் எனப் பல்வேறு திட்டங்களின் மூலம் நம் தலைவர் இன்றும் மக்கள் மத்தியில் இருக்கிறார். இந்த திட்டங்களைத் தவிர்க்க முடியாமல், நிறுத்த முடியாமல் இந்த ‘சோபா மாடல்’ அரசு தவித்துக் கொண்டிருக்கிறது. இந்த திட்டங்களில் கை வைக்க நினைத்தாலே இந்த அரசுக்கு ஒரு பயம் வரும். அந்த பயம் இருக்கிற வரைக்கும் தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப்பது நம்முடைய தலைவர் மு.க.ஸ்டாலின்தான். எனவே, இந்த குரளி வித்தை காட்டும் வேலையை நிறுத்திவிட்டு, முதலமைச்சர் ஆக்கப்பூர்வமான பணிகளைச் செய்ய வேண்டும்.”

எல்லாவற்றையும் மக்கள் தேடிக் கொண்டிருக்கிறார்கள்!
​”இந்த ஆட்சியில் மக்கள் இன்று மின்சாரம் (கரண்ட்) எங்கே என்று தேடிக்கொண்டிருக்கிறார்கள். நல்லபடியாக இருந்த சட்ட ஒழுங்கு எங்கே போனது என்று தேடுகிறார்கள். கடந்த ஐந்து வருட திமுக ஆட்சியில் ஜூன் 12 அன்னைக்கு மேட்டூர் அணை சரியாகத் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆட்சியில் தண்ணீர் எங்கே என்று மக்கள் தேடுகிறார்கள். மொத்தத்தில், தமிழ்நாட்டில் ‘ஆட்சி’ என்று ஒன்று நடந்துச்சே… அது இப்போது எங்கே என்று ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் தேட ஆரம்பித்துவிட்டார்கள்.”

ஊழல் ஒழிப்பின் லட்சணம்
​”புதுக்கோட்டை மாவட்டத்திலிருந்து ஒருவர் ஆளுங்கட்சியில் சேரப்போவதாகத் தினமும் செய்திகள் வருகின்றன. இவ்வளவு நாள் ஊழல் சக்தியாக இருந்தவர், ஆளுங்கட்சியில் சேர்ந்ததும் தூய சக்தி ஆகிவிடுவாராம். இதுதான் இந்த அரசின் ஊழல் ஒழிப்பு லட்சணம்!
​திமுகவினரை, குறிப்பாக ‘ஜென்சி’ (Gen-Z) திமுகவினரை குறிவைத்துச் சோதனைகளும், கைது நடவடிக்கைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. இதையெல்லாம் முறியடிக்க வேண்டியது நம் கடமை. இந்த ஆட்சியாளர்களின் அநியாயங்களை உடன்பிறப்புகளாகிய நாம் ஒன்றிணைந்து தோல் உரித்துக் காட்ட வேண்டும். இந்த அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளை அம்பலப்படுத்தி, கழக உடன்பிறப்புகள் தீவிரமாகக் களமாட வேண்டும்.” இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

MUST READ