தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு சட்டமன்றத் தொகுதியில் 2026 தேர்தலை முன்னிட்டு, திமுக வேட்பாளராகக் களமிறங்கியுள்ள ஆர்.வைத்திலிங்கம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
தஞ்சாவூர்: ஒரத்தநாட்டில் திமுக வேட்பாளரான வைத்திலிங்கத்திடம், நான்கு கட்ட போட்டியை பற்றியும் ஒரத்தநாட்டில் திமுகவின் வெற்றி நிலை எப்படியுள்ளது என செய்தியாளர் கேள்வியெழுப்பியுள்ளாா். அந்த கேள்விக்கு பதிலளித்த ஆா்.வைத்திலிங்கம், “திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு உறுதி. இந்த ஐந்து வருடங்களில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செய்த சாதனைகளை மகளிர், மாணவ மாணவிகள், விவசாயிகள், அரசு ஊழியர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பலதரப்பட்ட மக்களும் வரவேற்கிறார்கள், போற்றுகிறர்கள். அதனால் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்றார்.
அண்ணாதிமுக கட்சி என்பது இப்பொழுது இல்லை எனவும் அது எடப்பாடி அண்ணாதிமுகவாக மாறியது என குறிப்பிட்டார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுடன் அதிமுக என்ற கட்சியே இல்லாமல் போய்விட்டது, இப்போது இருப்பது பாரதிய ஜனதாவின் அடிமை அதிமுக என்று கூறினார்.

மேலும், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள வைத்திலிங்கம், திமுக அரசின் கடந்த ஐந்தாண்டு கால சாதனைகளையும், மக்கள் நலத்திட்டங்களையும் எடுத்து கூறி வாக்கு சேகரித்து வருகின்றார்.
ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி சொத்து முடக்கம்… அமலாக்கத்துறை அதிரடி..!
