spot_imgspot_img
Homeசெய்திகள்கேள்வி & பதில்தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குவது சரியா?

தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குவது சரியா?

-

- Advertisement -

கேள்வி- விஜய் – திரிஷாவின் நட்பை கொச்சைப்படுத்துவது ஏன்? இதில் மறைக்க என்ன இருக்கு? அரசியல்வாதிகளுக்கு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கக்கூடாதா? அதில் ஒழுக்கத்தை ஏன் எதிர்பார்க்கனும் ?தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்குவது சரியா?

பதில் – ஒரு தலைவர், நான் உங்கள் குடும்பத்தில் ஒருவன்… நான் உங்க அண்ணன் மாதிரி… தம்பி மாதிரி… தகப்பன் மாதிரி… தாய்மாமன் மாதிரின்னெல்லாம் பேசினால், நம்ம குடும்பத்தில், அண்ணனோ, தம்பியோ, தகப்பனோ, தன் மனைவிக்கு தெரியாமல் இன்னொரு பெண்ணோடு குடும்பம் நடத்திக்கொண்டிருப்பது தெரியவந்தால் எப்படி ரியாக்ட் செய்வோமோ, அப்படித்தான் ரியாக்ட் செய்வார்கள்! நம் வீடுகளில் உள்ள பெரியவங்க தொடப்பக்கட்டை பிஞ்சிடும்னு சொல்வாங்க!!

we-r-hiring

நடிகர் விஜய் இரண்டாண்டுகளுக்கு முன் விக்ரவாண்டியில் முதல் மாநாட்டில் பேசும்போதே, உங்கள் வீட்டில் நான் தான் தாய்மாமன் என்று பேசினார்! எம்.ஜி.ஆர்., “என் ரத்தத்தின் ரத்தங்களே!” என்று சொன்னபோதும், கலைஞர், “என் உயிரினும் மேலான கழக உடன்பிறப்புக்களே!” என்று சொன்னபோதும் ஒருவித ஜோடனை சொற்றொடராகவே பார்க்கப்பட்டது, ஆனால் விஜயை பல பெண்கள், தன் கனவு நாயகன் என்ற இடத்திலிருந்து நகர்த்தி, அண்ணன் என்ற பார்வையில் பார்க்கத் தொடங்கியிருக்கும் நிலையில், நான் உங்க வீட்டு தாய்மாமன் என்று சொன்னது சட்டென அனைவரிடமும் ஒட்டவைக்கின்ற மார்க்கெட்டிங் உத்தி!

நம்மூரில் தாய்மாமன்னா அப்படியே உச்சி குளிர்ந்திடுவார்கள்! தமிழ்நாட்டில் அந்த உறவுக்கு மட்டும் தான் அதிக பொறுப்பு இருக்கிறது. அக்கா/தங்கை பிள்ளைகளுக்கு மொட்டை போட்டு காது குத்துவதில் தொடங்கி, சடங்கு, திருமணம் என்று அனைத்துக்கும் தாய்மாமன் தங்கத்திலேயே மொய் எழுதிக்கிட்டு இருக்கணும்! அதற்கேற்ப முதல் மரியாதையும் வழங்கப்படும்! அப்படியான உறவென்று விஜய் தன்னைக் காட்டிக்கொள்ள விரும்புகிறார்!

முதல் மாநாட்டில் தொடங்கி, இறுதியாக தஞ்சையில் நடந்த பொதுக்கூட்டம் வரை இதேபோன்ற ஒரு உத்தியை விஜய் பயன்படுத்துகிறார்… தஞ்சையில் பேசும்போது, எனக்கும் உங்களுக்குமான உறவு, அண்ணன் தங்கை, அக்கா தம்பி, அப்பா மகன் போன்ற உறவுன்னு பேசுகிறார்! அதேபோல், எல்லா வீட்டிலும் இந்த விஜய் இருக்கிறான் என்கிறார்… ஒரு பிரபல நடிகர் இப்படியெல்லாம் பேசுவது, எளிதில் அவரது ரசிகர்களை மூளைச்சலவை செய்யும்… அதனால் தானே, விஜயை பார்ப்பதற்காக வந்தேன்… விஜய்ணாவை பார்ப்பதற்காக வந்தேன்னு சொல்லி அவ்வளவு கூட்டமும் ஓடிவருகிறது!

ஓர் அரசியல்வாதியாக, நான் ஆட்சிக்கு வந்தால் இன்னன்ன திட்டங்களை கொண்டுவருவேன்… என்று பேசுவது தனி… ஆனால் நான் உங்க சொந்தக்காரன்னு சொல்லிப் பேசும்போது… அதையும் ஒரு கூட்டம் நம்பும்போது, அதற்கேற்ப நடந்துக்கணும்ல! ஆண் – பெண் நட்பு தாராளமா இருக்கலாம்… அதிலென்ன தவறு! அதேவேளை, எந்தவொரு நட்பாக இருந்தாலும், அந்த நட்பு சட்டத்துக்கு புறம்பானதாக இருந்து, அதனால் அக்குடும்பமே மன உளைச்சலுக்கு உள்ளாகி, கோர்ட்டு வரைக்கும் போனால், அந்த நட்பு கேள்விக்குரியதே!

இங்கே, விஜயின் குடும்ப பந்தத்தை மீறிய உறவால் ஏற்பட்ட மனரீதியான, உடல்ரீதியான, பணரீதியான பிரச்சனைகளைக் குறிப்பிட்டு சங்கீதா விவாகரத்துக்கு செல்கிறார்… இது அதிர்வை ஏற்படுத்தினாலும்கூட, விஜய்ணாவுக்கு ஆதரவாகவே அவரது ரசிகர்கள் கூட்டம் இருந்தார்கள்…

திமுககாரங்க தான் சங்கீதாவை தூண்டிவிட்டு கோர்ட்டுக்கு அனுப்பிட்டாங்க என்று விஜய்க்கு ஆதரவாகக் குற்றம்சாட்டினார்கள்… இதுபோன்ற ஒரு பார்வையை நம் குடும்ப உறவுகளிலும்கூட நாம் பார்க்கலாம்… “என் பையனுக்கு அந்த கெட்ட பழக்கமெல்லாம் கிடையாது… நீங்க சொல்றதை நம்ப மாட்டேன்!” என்று அம்மாக்கள் சொல்வார்கள்.

அதுபோல் விஜய்க்கு சப்போர்ட்டாக அவரது ரசிகர்கள் கூட்டம் முட்டுக்கொடுக்கும்போதே, “அதெல்லாமில்ல… நான் இந்த நடிகையோட தான் வாழ்கிறேன்… சுற்றுகிறேன்…” எனச் சொல்வதுபோல் திரிஷாவோடு பொது நிகழ்ச்சிக்கு ஜோடியாக வருகிறார்! இதை சட்டென அவரது ரசிகர்களால் ஏற்க முடியவில்லை! அதிர்ச்சியில் தடுமாறுகிறார்கள்…

இந்த நேரத்தில் எல்லோருக்குமே “விஜய் மனைவி சங்கீதா சொன்னது சரிதான்… விஜய் மேல தான் தப்பு!” என்ற புரிதல் வந்துவிட்டது. அதேபோல், விஜயின் வாரிசுகளை நினைத்தும், விஜயின் பெற்றோரை நினைத்தும் நமக்கு வருத்தம் வருகிறது. இன்னொரு நடிகையை திருமணம் கூட செய்துகொள்ளட்டும்… முறைப்படி விவாகரத்து செய்தபின் திருமணம் செய்துக்கலாமே என்று தான் தோணும்! அந்த கேள்வியைத்தான் விஜயை நோக்கி கேட்கிறார்கள்… ஏனென்றால், விஜய் செய்வது, திருமணம் தாண்டிய உறவை நார்மலைஸ் செய்வதாக இருக்கிறது… நான் தூய்மை அரசியல் செய்கிறேன் என்று சொல்வதை… அவர்களின் வீட்டிலிருந்து தான் தொடங்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்ப்பார்கள்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாத்திகம் பேசுகிறார்… அவரது மனைவி கோவில் கோவிலாக செல்கிறார்… இதை மக்கள் கேள்வி கேட்கிறார்கள்… எதிர்க்கட்சிகளும் கேட்கிறார்கள்… ஆம், என் மனைவி அதுபோல் வளர்ந்துவந்தவர். அவரது எண்ணத்துக்கு நான் மதிப்பளிக்கிறேன்… அவரது உரிமையில் நான் குறுக்கிட மாட்டேனென்று முதல்வர் விளக்கமளிக்கிறார். அது அழகான புரிதல்! ஆக, தலைவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையும் பொது அரசியலில் கேள்விக்குள்ளாக்கப்படுவது இயல்பு தான். குதர்க்கமாகக் கேட்கப்படுவதைத் தாண்டி, அனைத்தையும் நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். அதே தான் விஜய்க்கும் பொருந்தும்.

அப்பா, மகன் உறவு மாதிரின்னு சொன்னீங்களே விஜய், ஆனால் உங்களுக்கும் உங்க அப்பாவுக்கும்… உங்களுக்கும் உங்க மகனுக்குமே சரியான உறவில்லையே… என்று கேள்வி எழுப்பத்தான் செய்வார்கள்! அப்படியான பார்வையை உருவாக்கியவர் விஜய்! மக்கள் மிகவும் சென்டிமென்டானவர்கள்… பாசம் வைத்தால் அதிகமாக பாசம் வைப்பார்கள்… ஒதுக்க நினைத்தால் ஒரேயடியாக ஒதுக்கவும் தயங்கமாட்டார்கள்!

தவெக அரசியல் கட்சியே கிடையாது – அது தற்குறிகளின் கூடாரம்

MUST READ