Homeசெய்திகள்கேள்வி & பதில்இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றால் பிரதமர் யார்?

இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றால் பிரதமர் யார்?

-

இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றால் பிரதமர் யார்?
 என்.கே.மூர்த்தி பதில்கள்

ராஜ்குமார்- அம்பத்தூர்
கேள்வி – உங்கள் கணிப்புப்படி இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றால் பிரதமர் யார்?

உங்கள் கணிப்புப்படி இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றால் பிரதமர் யார்?

பதில் – இந்தியா கூட்டணி வெற்றிப் பெற்றால் ராகுல்காந்தி தான் பிரதமர். அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒரு வேளை மேற்குவங்கம் முதல்வர் மம்தா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் போன்ற சில தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தால் ராகுல்காந்தி ஆதரவுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் பதவியை ஏற்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

காங்கிரஸ் கட்சி 125 முதல் 150 தொகுதிகள் வரை வெற்றி பெறுவதாக வைத்துக் கொள்வோம். திமுக 25 தொகுதிகள், சமாஜ்வாடி கட்சி 15, ஆம் ஆத்மி கட்சி 20, பீகார் மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா கட்சி 15, உத்தவ்தாக்கரே சிவசேனா, சரத்பவார் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை சேர்ந்து 15 தொகுதிகள், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் இடதுசாரிகள் ஆதரவுடன் ராகுல்காந்தி தலைமையில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் சில தலைவர்கள் ராகுல் வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்தால் அப்பொழுது மு.க.ஸ்டாலினுக்கும் ஒரு வாய்ப்பு இருக்கிறது. இந்த கருத்து உங்களுக்கு ஆச்சரியத்தை கொடுக்கலாம். ஆனால் இதுதான் எதார்த்தம்.

சந்தோஷ் – கொளத்தூர்
கேள்வி – 2024 மக்களவை தேர்தலில் மோடி தோல்வி அடைவார் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

2024 மக்களவை தேர்தலில் மோடி தோல்வி அடைவார் என்று எந்த அடிப்படையில் கூறுகிறீர்கள்?

பதில் – மோடி, அமித்ஷா கூட்டணி செய்த முதல் தவறு தங்களைப் பற்றி அதீதமாக கற்பனை செய்து கொண்டது. இரண்டாவது எதிர்க்கட்சிகளை குறைத்து மதிப்பீடு செய்தது. குறிப்பாக ராகுல்காந்தியை மிகவும் குறைத்து மதிப்பீடு செய்தது என்று நான் நினைக்கிறேன்.

ஒரு அரசன் போர்க் கலையில் வல்லவனாக இருக்கலாம். அவனுடைய போர் படையின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம். போருக்கான காலமும் சூழலும் அவனுக்கு ஏற்றப்படி மாற்றி அமைத்து வைத்திருக்கலாம். ஆனால் இத்தனை இருந்தாலும் போரினுடைய அடிப்படையான மையமான கேள்வி எதிரி யார் என்பதுதான். எதிரி யார் என்பதை தீர்மானிப்பது தான் போரின் முதல் வெற்றி. எதிரிகளே இல்லை என்றால் பிறகு யுத்தம் எதற்கு?

ஆர்எஸ்எஸ் – பாஜகவிற்கு முதன்மையான எதிரி பாகிஸ்தான், இஸ்லாமியர்கள். அவர்களை காரணம் காட்டி தான் 2014ல் ஆட்சியை பிடித்தார்கள். அதே காரணத்தை 2019லும் பேசினார்கள். வெற்றியும் பெற்றார்கள். அது முடிந்துவிட்டது. மீண்டும் அதேயே பேசி வாக்கு கேட்பது முட்டாள்தனம். அதைதான் மோடியும் அமித்ஷாவும் செய்கிறார்கள். அதனால் தோல்வி அடைவது உறுதி.

தசரதன் – குன்னூர்
கேள்வி – பிரதமர் மோடி நானே கடவுள் என்று பேசுகிறாரே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பிரதமர் மோடி நானே கடவுள் என்று பேசுகிறாரே அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில் – இதுகுறித்து நான் கருத்து சொல்வதைவிட ஒரு மருத்துவர் சொன்னதை சொன்னால் நல்லது என்று நினைக்கின்றேன். டாக்டர் ராமானுஜன் என்பவர் எழுதியதை படியுங்கள்.

தன்னைக் கடவுள் அவதாரம் அல்லது தனக்குக் கடவுள் அருள் இருப்பதாக ஒருவர் சொன்னால் மூன்று காரணங்கள் இருக்கலாம்
1. மனச்சிதைவு (Schizophrenia), மன எழுச்சி ( Bipolar disorder- Mania) ,போன்ற நோய்களிலோ, கஞ்சா , அபின் போன்ற போதைப் பொருட்களை உபயோகித்தாலோ விசேஷ சக்தி இருப்பது போன்ற மனப்பிறழ்வுகள் (Delusions) மற்றும் கடவுள் பேசுவது போன்ற மாயக்குரல்கள் கேட்பது ( Auditory Hallucination) போன்றவை ஏற்படலாம்.

சிலருக்குக் கூடுதலாகத் தானே பேசுவது, சிரிப்பது, குளிக்காமல் இருப்பது, ஒரே பொசிஷனில் பல நாட்கள் இருப்பது ( Catatonia) போன்ற பல்வேறு விசேஷ அறிகுறிகளும் இருப்பதால் இவர்களைச் சாமியாராக ஆக்கி வழிபட வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இவர்கள் தங்களைத் தாங்களே நம்புவார்கள். எல்லா நாளும், 24 மணி நேரமும் இவர்களுக்கு இந்த அறிகுறிகள் இருக்கும். தொலைக்காட்சி விவாதம் மூலம் பிரபலமான ஒரு சாமியார் இப்படித்தான் ‘ நான் கடவுள் அவதாரம், பறவைகள் பேசும் மொழி எல்லாம் எனக்குக் கேட்கும் ‘என்றார். நடிகர் விவேக் கூட அவரைப் போல் நடித்தார். இவர்களுக்குத் தேவை சிகிச்சை.

2. இன்னும் சிலர் மற்ற நேரங்களில் நார்மலாக இருந்தாலும் உணர்ச்சிவசப்படும் போது அருள் வந்து, சாமி வந்து ஆடுவார்கள். (Dissociation, possession). அன்னியன், சந்திரமுகி போல் அவ்வப்போது வந்து போகும். சாராயம் குடிப்பது, மாமியாரை அடிப்பது போன்ற நிறைவேறாத அடிமன ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டாலும் இவர்களால் பெரிதாக மற்றவர்களுக்குப் பாதிப்பு இருக்காது.

பக்தி அதிகமாகித் தன்னையே மறந்து பரவசம் அடைவதும் ஆன்மிக அனுபவங்களும் இதன் மிதமான வகை (Trance). இதை நோய் என்று சொல்ல முடியாது எனினும் சில சமயம் அளவுக்கு அதிகமானால் இவர்களுக்கும் உளவியல் சிகிச்சை தேவைப்படலாம்.

3. வேண்டுமென்றே நான் கடவுளின் அவதாரம், தனக்கு விசேஷ சக்திகள் இருக்கின்றன எனப் போலியாகப் பொய் சொல்லிப் பிறரை ஏமாற்றுவது. இவர்களுக்குத் தேவை தண்டனை.

1,2,3 எதுவாக இருந்தாலும் யாரும் கடவுளின் அவதாரம் அல்ல.
அறிவியல் வளர்ந்துள்ள இக்காலத்தில் ஒருவர் கல்லைப் பெண்ணாக்கினாலோ, தண்ணீரை ஒயின் ஆக்கினாலோ கட்டாயம் சந்தேகக் கண்ணோடுதான் பார்க்க வேண்டும்.

தமிழ்செல்வி – கடலூர்
கேள்வி – உலகில் சிறந்த பணக்காரர் என்றால் யாரை குறிப்பிடுவீர்?

உலகில் சிறந்த பணக்காரர் என்றால் யாரை குறிப்பிடுவீர்?

பதில் – பணத்தையும் பொருளையும் ஒருவன் சேர்த்து வைத்திருப்பதனால் அவனை பணக்காரன் என்று எல்லோரும் சொல்வார்கள். ஆனால் அது உண்மையா? ஒருவனிடம் எவ்வளவு பணம் எவ்வளவு பொருள் வந்தாலும் மனம் அதனை போதும் என்று ஒருபோதும் ஏற்றுக்கொள்வதில்லை. 500 ரூபாய் கிடைத்தால் 5000 ரூபாய் கேட்கும். எவ்வளவு கிடைத்தாலும் அதைவிட கூடுதலாக எதிர்பார்ப்பது தான் மனதின் இயல்பு. அப்படி என்றால் ஒருவன் பணக்காரன் ஆகிறான் என்பதற்கு எது அடையாளம்? பணம் சேரச்சேர அவன் பணக்காரன் ஆவது இல்லை.

உலகில் சிறந்த பணக்காரர் என்றால் யாரை குறிப்பிடுவீர்?

பணம் வரும்போது எவருடைய மனதில் ஆசைகள் குறைகிறதோ அவரே பணக்காரர் ஆகிறார்.

இலக்கியகுமார் – செங்குன்றம்
கேள்வி – பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் என்றார், ராமர்கோயில் என்றார், பின்னர் அது கை கொடுக்கவில்லை என்றதும் நானே கடவுள் என்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் ராமர் என்றார், ராமர்கோயில் என்றார், பின்னர் அது கை கொடுக்கவில்லை என்றதும் நானே கடவுள் என்கிறார். இதை எப்படி பார்க்கிறீர்கள்?

பதில் – பிரதமர் மோடி கடந்த 10 ஆண்டுகளில் ஒரு முரை கூட  செய்தியாளர்களை சந்தித்தது கிடையாது. பொதுமக்களோடு கலந்துரையாடல் செய்தது கிடையாது. ஒரு மன்னரைப்போன்று வருவார், மனதில் தோன்றியதை மேடையில் பேசுவார். அதை நாம் கேட்டுக்கொண்டோம். அதுவரை அவரைப் பற்றி புரிந்துக் கொள்ள நமக்கு வாய்ப்பு இல்லை.

தேர்தல் பிரச்சாரத்தில் கடந்த ஒரு மாதமாக மக்களிடம் நேரடியாக பேசியும், உரையாடல் நடத்தியும் வருகிறார். இப்போதுதான் ஓரளவு அவரைப்பற்றி புரிந்து கொள்ள நமக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

அவர் மாபெரும் கடவுள் பக்தர், இந்துமத நம்பிக்கையாளர். தற்போது அவருடைய பேச்சு, செயல் மூலம் கடவுள் என்பது ஒன்று இல்லை. அவை அனைத்தும் கற்பனை என்று அவர் செய்து வருகின்ற ஒவ்வொரு நடவடிக்கையில் இருந்தும் புரிந்து கொள்ள முடிகிறது.

தந்தை பெரியார் எவ்வளவு பெரிய தீர்க்கதரிசி என்பதை இப்போது உணர முடிகிறது !

அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம்.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்விபதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது.

மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும்.

உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031

MUST READ