கேள்வி – திமுக கூட்டணியில் இருந்து விலகி த.வெ.கவோடு இணைவதற்கு முயற்சிக்கும் காங்கிரஸைப் பற்றி உங்கள் கருத்து?
பதில் – முன்னாள் பிரதமர்கள் இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி காலத்தில் காங்கிரஸ் கட்சி தமிழர்களுக்கு முற்றிலும் எதிரான கட்சியாக இருந்தது. இந்தித் திணிப்பை தீவிரப்படுத்தி தமிழர்களின் வெறுப்பை சம்பாதித்தது. மிசாவை கொண்டுவந்து திமுகவினரை அடித்து கொடுமைப்படுத்தியது. ராஜீவ்காந்தியை கொலை செய்து திமுகவின் மீது பழியை போட்டு திமுகவை அழிக்க நினைத்தது. 2 ஜி அலைக்கற்றை ஊழலை திமுக மீது திணித்தது, திமுக ஆட்சியை இரண்டு முறை கலைப்பதற்கு காரணமாக இருந்தது என்று தொடர்ந்து பாவச்செயலை செய்து வந்த கட்சி காங்கிரஸ். இவ்வளவு துரோகங்களை செய்தவர்களுடன் திமுக கூட்டணி அமைத்ததற்கு காரணம் ராகுல்காந்தி தலைமையில் உள்ள காங்கிரஸ் ஓரளவு தெளிவுப் பெற்று சித்தாந்தப் பாதையில் பயணிக்க தொடங்கி இருக்கிறது. தற்போது அந்த கட்சி தவெகவுடன் கூட்டணி அமைத்து கிணற்றில் குதிக்க முயன்றால் அது அவர்களின் நிலைபாடு. அது எந்த விதத்திலும் திமுகவை பாதிக்காது.

தங்கதுரை – மதுரை
கேள்வி – தவெகவைப் பற்றி உங்கள் பார்வை என்ன?
பதில் – தவெக என்பது ஒரு அரசியல் கட்சி இல்லை. ஒரு பிரபல நடிகருக்காக கூடுகின்ற கூட்டம். அந்த கூட்டம் எவருடைய கருத்தையும், ஆலோசனையும் கேட்டு செயல்படாது. அதுபோன்ற கும்பல் தேர்தல் பாதைக்கு சரி வருமா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி.
மேலும் தவெக என்கிற கட்சி பாஜக ஆலோசனையில் தொடங்கப்பட்டது. அந்த கட்சியை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பாஜக தான் முடிவு செய்யும். இன்னும் ஓரிரு வாரங்களில் முடிவு தெரிந்துவிடும்.
ரகுநாதன் – செங்குன்றம்
கேள்வி – திமுக வின் எதிரிகள் யார்? அவர்களை எப்படி அடையாளம் காண்பது?
பதில் – தந்தை பெரியாரின் எதிரிகள் யார் யாரோ, அவர்கள் எல்லோரும் திமுகவின் எதிரிகள் தான்.
திமுகவை தொடங்கியபோது அறிஞர் அண்ணா சொன்ன கொள்கை முழக்கங்கள் இப்போது படித்தாலும் பொருத்தமாக இருக்கும். சாதி பேதமுள்ள சமுதாயத் துறையில் சீர்திருத்தம். பொருளாதாரத் துறையில் சமதர்மம். அரசியலில் வடநாட்டு ஆதிக்கத்தில் இருந்து விடுதலை. ஆகிய கொள்கைகள் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைகள் என்று அறிவித்தார். மேலும் திராவிட முன்னேற்றக் கழகம் பெரியார் வகுத்து கொடுத்த அதே பாதையில் தீவிரமாக செல்ல முனைந்திருக்கிறது. இதோ நம் கண்முன் வடநாட்டு ஏகாதிபத்தியம், மக்களை பாழ்படுத்தும் பாசிசம், பதுங்கிப் பாய காத்திருக்கும் பழைமை வாதம். இவை ஒழிய வேண்டும். பழைமையும், பாசிசமும் முறியடிக்கும் வரை ஓயமாட்டோம். தொடர்ந்து உழைப்போம். இயக்கம் உருவான பலனை காண்போம் என்று 17-9-1949 அன்று திமுக தொடங்கப்பட்ட முதல் கூட்டத்திலேயே அறிஞர் அண்ணா அறிவித்தார்.
கேள்வி – தமிழ்நாட்டிற்கு ஆபத்தான ஊடக வியலாளர்கள் யார் என்று உங்களால் அடையாளம் காட்ட முடியுமா?
பதில் – தமிழர்களுக்கு, தமிழ் நிலத்திற்கு எதிரான கருத்துகளை எழுதியும், பேசியும் வருபவர் ஆடிட்டர் குருமூர்த்தி. அதற்கு அடுத்து நடுநிலையாளர் போல் நயமாக பேசி தமிழர்களுக்கு விரோதமான முயற்சியில் ஈடுபட்டு வருபவர் ரங்கராஜ் பாண்டே. இந்தப் பட்டியலில் தினமலர், ஜூனியர் விகடன் என்று பட்டியல் நீள்கிறது. இவர்கள் மிகவும் நேர்மையாளர்கள் போல் பேசுவார்கள். ஆனால் முழுவதும் தமிழ் மண்ணுக்கும், தமிழ் மக்களுக்கும் துரோகம் விளைவிக்கின்ற செயல்களை செய்து வருகிறார்கள்.
சந்தோஷ் – வடக்கரை
கேள்வி – இந்தியாவில் அதிக கடன் வாங்கும் மாநிலம் தமிழ்நாடு என்று விமர்சனம் எழுந்துள்ளதைப் பற்றி?
பதில் – ஒவ்வொரு குடும்பத் தலைவர் கணக்கிலும் 4 லட்சம் ரூபாய் இருக்கிறது என்று சில தலைவர்கள் மிகைப்படுத்தி பேசி மக்களை பயமுறுத்துகிறார்கள். இவர்கள் யாரும் ஒன்றிய அரசு வாங்கியுள்ள கடனை பற்றி பேசமாட்டார்கள்.
கடன் வாங்குவது தவறு இல்லை. அந்த அளவிற்கு வளர்ச்சி இருக்கிறதா இல்லையா என்று பார்க்க வேண்டும். தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11.19 சதவீதம் என்று உயர்ந்து இருக்கிறது. வேலை வாய்ப்புகள் பெருகி வருகிறது. அதுவும் கடன் வாங்குவது, அடைப்பது அரசாங்கத்தின் வேலை. தனி மனிதன் கவலைப்பட தேவையில்லை.
சீமான் மனைவி, விஜயலட்சுமியை பற்றி அப்படி பேசியிருப்பாரா? – என்.கே.மூர்த்தி பதில்


