Homeசெய்திகள்கேள்வி & பதில்பாஜகவிற்கும் திமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

பாஜகவிற்கும் திமுகவிற்கும் என்ன வித்தியாசம்?

-

- Advertisement -

பாஜகவிற்கும் திமுகவிற்கும் என்ன வித்தியாசம்? என்.கே.மூர்த்தி பதில்கள்

கண்ணப்பன்- சங்கராபுரம்
கேள்வி- பாஜகவிற்கும் திமுகவிற்கும் என்ன வித்தியாசம்? எனக்கு அப்படி எதுவும் வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை.

பாஜகவிற்கும் திமுகவிற்கும் என்ன வித்தியாசம்?பதில் : தமிழில் கூடு, கூண்டு என்ற இரண்டு சொற்கள் இருக்கிறது. இரு சொற்களும் ஒன்று போலவே தெரியும். ஆனால் இரண்டிற்கும் பெரிய வேறுபாடு இருக்கிறது. கூடு என்பது பறவைகள் தாங்கள் வாழ்வதற்காக கட்டிக் கொள்கிற வீடு என்று கூறலாம். கூண்டு என்பதோ அந்தப் பறவைகளை அதன் போக்கில் வாழ விடாமல் தடுப்பதற்காக நாம் செய்து வைத்திருக்கிற ஓரிடம். இரண்டிற்கும் அடிப்படை வேறுபாடுகள் இருக்கிறது. கூடுகளில் வாழ்வதில் சுதந்திரம் இருக்கிறது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. இது திமுகவின் கொள்கை.

கூடுகளில் வாழ்வதில் சுதந்திரம் இருக்கிறது. சுயமாக சிந்தித்து முடிவெடுக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது

கூண்டு என்பது பறவைகளை அடைத்து வைப்பதற்காக மனிதனால் உருவாக்கப் பட்ட சிறை. பாஜக கூண்டுகளை உற்பத்தி செய்கின்ற நிறுவனம். ந்த நாட்டை திறந்தவெளி சிறையாக மாற்றி அதற்குள் மக்களை அடைத்து, அவர்கள் சொல்லும் உணவை உண்ண வைப்பது அவர்கள் காட்டும் கடவுளை வணங்க வைப்பது, மீறினால் தேசத் துரோகி என்ற பட்டங்களை வழங்குவது, மனிதனை சுயமாக சிந்திப்பதை தடுப்பது இதுதான் பாஜக வின் கொள்கை. அதில் முன்னேற்றம் எதுவும் இருக்காது. நாம் நம் வீட்டை பூட்டிக் கொண்டால் அது வீடு, நம் வீட்டை அடுத்தவர் பூட்டினால் அதன் பெயர் சிறை. இந்த வேறுபாடுகளை புரிந்துகொள்ள வேண்டும்.

செந்தில் – ஆவடி கேள்வி – திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

ஆவடி கேள்வி - திமுக கூட்டணியில் விரிசல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

பதில்: ஒரு மன்னன் போர்க் கலையில் வல்லவனாக இருக்கலாம். அவனுடைய போர் படையின் எண்ணிக்கை கூடுதலாகவும் இருக்கலாம். போருக்கான காலமும் சூழலும் ஏற்றதாக இருக்கலாம். இத்தனை சாதகமான சூழல் இருந்தாலும் போரின் அடிப்படையான கேள்வி தன் எதிரி யார் என்று தீர்மானிப்பது தான். அதுவும் முதன்மையான எதிரி யார் என்பதை அறிந்திருக்க வேண்டும். அந்த புரிதல் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இடது சாரி அமைப்புகளுக்கு இருக்கிறது.

காளிதாஸ் – சென்னை
கேள்வி – 2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு “கரும்பு விவசாயி” சின்னம் கிடைக்குமா? கிடைக்காதா?

பதில்: தமிழகத்தில் நாம் தமிழர் கட்சிக்கு 6 சதவீதம் ஓட்டு வங்கி இருக்கிறது. பாஜக விற்கும் ஏறத்தாழ அதே அளவு ஓட்டு வங்கி இருக்கிறது. இந்த தேர்தலில் பாஜக வளர்ந்திருக்கிறது என்றும் தமிழகத்தில் திமுக, அதிமுகவிற்கு அடுத்த மூன்றாவது பெரிய கட்சி பாஜக தான் என்ற தோற்றத்தை கட்டமைக்க வேண்டும். அதற்கு நாம் தமிழர் கட்சி தடையாக இருந்துவிடக் கூடாது என்ற காரணத்திற்காக “கரும்பு விவசாயி” சின்னம் பறிக்கப்பட்டுள்ளது. இது அநீதி.

பாரதிய பிரஜா ஆகியதா

நாம் தமிழர் கட்சி கடந்த பத்தாண்டு காலமாக ஒரே சின்னத்தில் போட்டியிட்டு வருகிறது. அவர்களுக்குத்தான் முன்னுரிமை அளித்து சின்னத்தை ஒதுக்கி இருக்க வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு புதியதாக தொடங்கப்பட்ட, தேர்தலில் இதுவரை போட்டியிடாத பாரதிய பிரஜா ஆகியதா என்ற கட்சிக்கு ஒதுக்கி தேர்தல் ஆணையம் தவறு செய்து விட்டது.

வினோத் – முகப்பேர்
கேள்வி- இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முன்னேறி வருவதற்கு காரணம் என்ன?

இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு முன்னேறி வருவதற்கு காரணம் என்ன?

பதில்:  தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு அடித்தளம் அமைத்து தந்தவர் அறிஞர் அண்ணா. 1967 மார்ச் 6 ம் தேதி பேரறிஞர் அண்ணா முதலமைச்சராக பதவி ஏற்றுக் கொண்ட நாள். அவர் ஆட்சி காலத்தில் மிக முக்கியமான மூன்று சாதனைகளை செய்துள்ளார்.

1 சென்னை ராஜ்யம் என்று இருந்த நம் மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என்று மாற்றினார்.

2 சுயமரியாதை திருமணங்கள், சீர் திருத்த திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று சட்ட அங்கீகாரம் வழங்கினார்.

3 தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என்கிற இரு மொழி கொள்கையை நிறைவேற்றினார். மும்மொழி கொள்கைக்கு தமிழ்நாட்டில் இடமில்லை என்று அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தினார்.

தமிழகத்தில் தாய்மொழி அவசியம், கட்டாயம். உலகத்தோடு தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள ஆங்கிலம் அவசியம். அந்த கொள்கையில் பயணம் செய்த தமிழ்நாடு கல்வியியல் பெரும் வளர்ச்சி அடைந்தது. அதன் வாயிலாக உலகம் முழுவதும் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் தமிழ்நாட்டை சேர்ந்த இளைஞர்கள் அதிக பேர் பணி செய்கிறார்கள். உயர் பொறுப்பில் இருக்கிறார்கள். அதனால் மற்ற மாநிலங்களை விட வளர்ச்சி அடைந்து இருக்கிறது.

அன்புள்ள APCNEWSTAMIL வாசகர்களுக்கு வணக்கம்.

வாரம் தோறும் ஞாயிற்றுக் கிழமை கேள்வி- பதில் இடம்பெறுகிறது. இதில் உங்கள் கேள்விகளும் இடம் பெற வேண்டும் என்று ஆசிரியர் குழு விரும்புகிறது.

மேலும், இதில் இடம் பெறுகின்ற கேள்விகளில் முக்கியமான மூன்று கேள்விகள் தேர்வு செய்து அதில் முதல் கேள்விக்கு ரூபாய். 500, இரண்டாவது கேள்விக்கு ரூபாய். 250 மற்றும் மூன்றாவது கேள்விக்கு ரூபாய். 100 பரிசுகள் வழங்கப்படும்.

உங்கள் கேள்விகள் அனுப்ப வேண்டிய வாட்ஸப் எண்#. 9176541031

MUST READ