ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய போட்டியில் 78 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.
பழைய சப்பாத்தியில் ஒளிந்திருக்கும் நன்மைகள்!
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய சென்னைக்கு சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 212 ரன்களை எடுத்தது. 213 என்ற இலக்கை நோக்கி விளையாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 134 ரன்களில் சுருட்டியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்கள் மட்டுமே எடுத்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோல்வி அடைந்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 98, மிட்செல் 52 ரன்களையும், துஷார் தேஷ் பாண்டே 4 விக்கெட்டுகளையும் எடுத்தனர்.
54 பந்துகளில் 98 ரன்களை விளாசிய சென்னை அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 2 ரன்களில் சதத்தை தவறவிட்டார். ஹைதராபாத் அணி தரப்பில் மார்க்ரம் 32, க்ளாசன் 20 ரன்களையும், நடராஜன், புவனேஸ்வர் தலா 1 விக்கெட்டையும் எடுத்தனர்.
இட்லி, தோசைக்கு இனிமே குடைமிளகாய் சட்னி செய்து பாருங்க!
ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன.