
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் வங்கதேசம் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு!
தர்மசாலாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய ஆஃப்கானிஸ்தான் அணி 37.2 ஓவர்களில் 156 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ் 47 ரன்களையும், அஸ்மதுல்லா ஒமர்சாய் 22 ரன்களையும், இப்ராஹிம் ஸ்த்ரான் 22 ரன்களையும் எடுத்தனர்.
அரசு மருத்துவக் கல்லூரிகளின் முதல்வர்களைப் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!
பின்னர் ஆடிய வங்கதேசம் அணி 34.4 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வங்கதேசம் அணி தரப்பில் ஹொசைன் 59 ரன்களையும், மெஹதி ஹசன் 57 ரன்களையும், ஷகிப் அல் ஹசன் 14 ரன்களையும் எடுத்தனர்.