
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை, கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான மே 14- ஆம் தேதி நடைபெறும் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை (மே 12) தொடங்குகிறது.
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம், வரும் மே 14- ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை காலை 07.00 மணிக்கு தொடங்குகிறது. அதேபோல், ஆன்லைனில் காலை 09.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 3,000, ரூபாய் 5,000 டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் மட்டுமே நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூபாய் 1,500 டிக்கெட் விற்பனையும் கவுண்டரில் மட்டும் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வரலாற்றிலேயே முதல்முறை…. ஏழை மாணவியின் குடும்பத்திற்கு திறந்த ஆளுநர் மாளிகை கதவுகள்!
பெண்களுக்கும், மாற்றுத் திறனாளிகளுக்கு கணிசமான டிக்கெட் ஒதுக்கப்பட்டுள்ளன. சென்னை அணி 12 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 15 புள்ளிகளைப் பெற்று, பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.