Homeசெய்திகள்விளையாட்டுகுஜராத் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி!

குஜராத் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி!

-

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி முதலாவது பேட்டிங்கில் 206 ரன்கள் குவித்துள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இன்று நடைபெறவுள்ள 7வது லீக் போட்டியில் ருத்ராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே இதே மைதானத்தில் முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றி அடைந்துள்ள சென்னை அணி இன்றைய போட்டியில் வெற்றி பெற்று, தனது வெற்றி கணக்கை தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய குஜராத் அணி, அதே உத்வேகத்துடன் இந்த போட்டியிலும் வெற்றி பெற்று, தங்களது வெற்றி பயணத்தை தொடர முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2வது வெற்றியை ருசிக்க சென்னை, குஜராத் அணிகள் மல்லுகட்டும் என்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் குஜராத் அணி 3 முறையும், சென்னை அணி 2 முறையும் வெற்றி பெற்றுள்ளன. இப்போட்டியில் டாஸ் வென்ற குஜாராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து சென்னை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ருத்ராஜ் கெய்க்வாட் 46 ரன்னிலும், ரச்சின் ரவிந்திரா 46 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக சிவம் துபே 51 ரன்கள் எடுத்தார். இறுதியில் அணியானது 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 206 ரன்கள் குவித்தது. இதனையடுத்து குஜராத் அணிக்கு 207 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

MUST READ