Homeசெய்திகள்விளையாட்டுவேண்டுமென்றே ரோகித் சர்மாவை அலைக்கழித்தாரா ஹர்திக் பாண்டியா? - ரசிகர்கள் ஆத்திரம்

வேண்டுமென்றே ரோகித் சர்மாவை அலைக்கழித்தாரா ஹர்திக் பாண்டியா? – ரசிகர்கள் ஆத்திரம்

-

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா, முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவை அலைக்கழித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது நேற்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற போட்டியில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், சுப்மான் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பவுலிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து குஜராத் அணி முதலாவது பேட்டிங்க் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக விருத்திமான் சஹாவும் ,சுப்மான் கில்லும் களமிறங்கினர். சஹா 19 ரன்னும், கில் 31 ரன்களும் எடுத்தனர். அணியின் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 45 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர்.

இறுதியாக குஜராத் அணியானது 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழந்து 168 ரன்கள் சேர்த்தது. இதனைத்தொடர்ந்து மும்பை அணிக்கு 169 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய இஷான் கிஷான் ரன் எதுமின்றியும், ரோகித் சர்மா 43 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிபட்சமாக டிவால்ட் பிரவிஸ் 46 ரன்கள் எடுத்தார். இறுதியாக மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் குஜராத் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனிடையே முதல் இன்னிங்சின் போது, மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டனான ஹர்திக் பாண்டியா, முன்னாள் கேப்டனான ரோகித் சர்மாவை அலைக்கழித்த சம்பவம் ரசிகர்களிடையே ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. கேப்டனாக இருந்த போது ரோகித் சர்மா பெரும்பாலும் உள்வட்டத்திற்குள் மட்டும் தான் பீல்டிங் செய்வது வழக்கம். இந்த நிலையில், ஹர்திக் பாண்டியா அவரை எல்லைக்கோட்டிற்கு அருகே நிற்க வைத்ததோடு, அவ்வப்போது வேறு வேறு இடங்களுக்கும் மாற்றி அனுப்பினார். இது ரசிகர்கள் மத்தியில் முகச்சுழிவையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

MUST READ