Homeசெய்திகள்விளையாட்டு160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!

-

- Advertisement -

 

160 ரன் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்திய இந்திய அணி!
Photo: ICC

உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை 160 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியது. லீக் ஆட்டங்களில் தோல்வியே சந்திக்காத அணியாகவும் இந்திய அணி சாதனைப் படைத்துள்ளது.

சென்னையில் மோசமடைந்த காற்றின் தரம்!

பெங்களூருவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடியது. இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா- சுப்மன் கில் இணை சிறப்பான தொடக்கத்தைத் தந்து முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களைக் குவித்தது.

சுப்மன் கில், ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் அரைசதம் விளாசி அவுட் ஆகினர். கே.எல்.ராகுல் 102 ரன்களில் அவுட் ஆக, ஸ்ரேயாஸ் ஐயர் 128 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 410 ரன்களை எடுத்தது.

இதையடுத்து, வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய நெதர்லாந்து அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்த போதிலும், ரன்களைக் குவித்தது. 47.5 ஓவர்களில் 250 ரன்களுக்கு ஆட்டமிழந்து, நெதர்லாந்து அணி தோல்வி அடைந்தது.

பட்டாசு வெடித்த சிறுவர்கள் : பற்றி எரிந்த குடிசை.. சிதம்பரம் அருகே பரபரப்பு..

இந்திய அணியில் கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயரை தவிர, மற்ற ஒன்பது வீரர்களும் பந்து வீசினர். லீக் ஆட்டங்கள் முடிவடைந்த நிலையில், வரும் நவம்பர் 15- ஆம் தேதி நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி, நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது.

MUST READ