Homeசெய்திகள்விளையாட்டுஇந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!

-

- Advertisement -

 

இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி!
File Photo

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

“பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவேத் தீர்மானம்”- கௌரவ் கோகாய் மக்களவையில் பேச்சு!

கயனாவில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங்கைத் தேர்வுச் செய்து விளையாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 159 ரன்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ் தலா ஒரு விக்கெட்டையும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர்.

அதைத் தொடர்ந்து, விளையாடிய இந்திய அணி 17.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 ரன்களை எடுத்தது. இதனால் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக சூர்யகுமார் யாதவ் 83 ரன்களையும், திலக் வர்மா 49 ரன்களையும் எடுத்தனர்.

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

சர்வதேச 20 ஓவர்கள் போட்டியில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற சாதனையைப் படைத்தார் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் குல்தீப் யாதவ்.

MUST READ