Homeசெய்திகள்இந்தியா"பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவேத் தீர்மானம்"- கௌரவ் கோகாய் மக்களவையில் பேச்சு!

“பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவேத் தீர்மானம்”- கௌரவ் கோகாய் மக்களவையில் பேச்சு!

-

 

"பிரதமரின் மவுன விரதத்தைக் கலைக்கவேத் தீர்மானம்"- கௌரவ் கோகாய் மக்களவையில் பேச்சு!
File Photo

நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது முதல் நாளில் சுமார் ஆறு மணி நேரம் விவாதம் நடைபெற்றது. இன்றும் தீர்மானத்தின் மீதான விவாதம் தொடரவுள்ளது.

பொது சிவில் சட்டத்திற்கு எதிராக கேரள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்!

மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தில், ராகுல் காந்தி முதலில் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் கௌரவ் கோகாய், விவாதத்தைத் தொடங்கி வைத்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது, “நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து பிரதமர் ஏன் பேசவில்லை? மணிப்பூர் தொடர்பான பிரதமர் நரேந்திர மோடியின் மவுன விரதத்தைக் கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி இதுவரை ஏன் மணிப்பூருக்கு செல்லவில்லை? ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் மணிப்பூருக்கு சென்றிருக்கிறார்கள். இத்தனை நாட்கள் மணிப்பூரில் கலவரம் நடக்கிறது.

இது பற்றி பேச பிரதமருக்கு 30 நொடிகள் கிடைத்ததா? மணிப்பூர் முதலமைச்சரின் செயலை ஏன் பிரதமர் கண்டிக்கவில்லை? அவரைக் கண்டிப்பதற்கு பதில் ஏன் அவருக்கு ஆதரவு தருகிறீர்கள்? உங்களுக்கு இது தெரியாததற்கு உளவுத்துறைத் தோல்வியே காரணம்” என்றார்.

ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் ஒப்படைப்பு!

கௌரவ் கோகாய் பேசும் போது, ராகுல் காந்தி ஏன் பேசவில்லை என பா.ஜ.க. எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினர். பிரதமர் ஏன் பேசவில்லை என பதிலுக்கு காங்கிரஸ் கட்சித் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

MUST READ