பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் முகேஷ் குமார். கடந்த 1993ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி பிறந்த முகேஷ், தந்தையின் தொழில் காரணமாக கடந்த 2012ம் ஆண்டு கொல்கத்தாவில் குடியேறினார். கிரிக்கெட்டில் ஆர்வம் கொண்ட முகேஷ், உள்ளூர் போட்டிகளில் பீகார் அணிக்காக விளையாடி வந்தார். அதன்பின்னர் முதன்முறையாக ஃபர்ஸ்ட் கிளாஸ் கிரிக்கெட்டில் விளையாடிய அவர், ரஞ்சி டிராபி, விஜய் ஹசாரே, சையது முஷ்டாக் அலி டிராபி தொடர்களிலும் விளையாடியுள்ளார். தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்ததன் மூலம், கடந்த 2023ம் ஆண்டு 20 ஜூலைம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார்.


தொடர்ந்து அதே மாதம் 27ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஆட்டம் மூலமாக ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும், ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியின் மூலம் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். இதனிடையே ஐபிஎல் தொடரில் டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்கினார். தொடர்ந்து 2024ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரிலும் டெல்லி அணியில் தக்க வைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்திய கிரிக்கெட் வீரர்களில் சிறந்த வேகப்பந்து வீச்சாளராக தவிர்க்க முடியாத இடம் பிடித்துள்ள முகேஷ் குமார், தற்போது அஸ்திரேலியாவுக்கு எதிரான 5 நாள் கொண்ட டி20 போட்டியில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் முகேஷ் குமாருக்கும் , அவரது நெருங்கிய உறவுக்கார பெண்ணும், காதலியுமான திவ்யா சிங்கை கரம்பிடித்துள்ளார். முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் இந்த ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. 8 மாதங்களுக்குப் பிறகு நேற்று அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்துள்ளது. இதனால் 3வது டி20 போட்டியில் அவர் பங்கேற்கவில்லை. ஆனால் டிசம்பர் 1ம் தேதி நடைபெறும் 4வது டி20 போட்டியில் அவர் இடம்பெறுவார் என பிசிசிஐ அறிவித்துள்ளது. திருமண வாழக்கையில் அடியெடுத்து வைத்துள்ள முகேஷ் குமாருக்கு சக வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



