spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டு5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!

-

- Advertisement -

 

5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி!
Photo: BCCI

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

we-r-hiring

மணிப்பூர் கொடூரம் குறித்து விசாரிக்க சி.பி.ஐ.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை!

கென்சிங்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரர்கள், இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல், 23 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 114 ரன்களை மட்டுமே எடுத்தது.

இந்திய அணி தரப்பில், ரவீந்திர ஜடேஜா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும் எடுத்து அசத்தினர். அதேபோல், முகேஷ் குமார், ஹர்திக் பாண்டியா, தாகூர் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் எடுத்தனர்.

பின்னர், விளையாடிய இந்திய அணி 22.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.

“இலவச சலுகை எனக்கும் பொருந்தும்” என நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்!

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

MUST READ