
மணிப்பூரில் இரண்டு பெண்களுக்கு இழைக்கப்பட்டக் கொடுமைக் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க உள்ளது.

கூட்ட நெரிசல் காலங்களில் தங்கும் வசதியைத் தர தேவஸ்தானம் வித்தியாச முயற்சி!
மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடியின பெண்கள் இருவர், ஆடையின்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அமைப்பு விசாரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரைச் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மணிப்பூருக்கு செல்லும் ‘இந்தியா’ கூட்டணி எம்.பி.க்கள்!
மணிப்பூர் விவகாரத்தில் தவறிழைத்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று மத்திய அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மணிப்பூரில் நடந்த குற்றங்கள் தொடர்பாக ஏற்கனவே, சில வழக்குகளை சி.பி.ஐ. அமைப்பு விசாரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.