
வன்முறைகளைச் சந்தித்து வரும் மணிப்பூரில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் 25- க்கும் மேற்பட்ட வீடுகளும், கடைகளும் தீக்கரையாக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் இரண்டு நாள் பயணமாக நாளை (ஜூலை 29) மணிப்பூருக்கு செல்கின்றனர்.

எதிர்க்கட்சிகளின் அடுத்தக்கூட்டம் எங்கு தெரியுமா?- விரிவான தகவல்!
கடந்த மூன்று மாதங்களாக, மணிப்பூர் மாநிலத்தில் நடந்து வரும் இன கலவரம் முடிவுக்கு வராமல் நீடித்துக் கொண்டே இருக்கிறது. அங்கு நேரில் செல்ல ‘இந்தியா’ எதிர்க்கட்சிக் கூட்டணியான நாடாளுமன்ற உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர். காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 20 எம்.பி.க்களைக் கொண்ட குழு, இரண்டு நாள் பயணமாக, நாளை (ஜூலை 29) மணிப்பூர் செல்லும் என காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் கொறடா மாணிக்கம் தாக்கூர் தெரிவித்துள்ளார்.
மணிப்பூருக்கு செல்லும் எம்.பி.க்கள் குழு, வன்முறையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடும். முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களைச் சந்திக்கிறது. அதேபோல், குக்கி, மைத்தேயி உள்ளிட்ட சமூக மக்களையும் எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்துப் பேசவிருக்கிறது.
இந்தியா கூட்டணியில் உள்ள 26 கட்சிகளின் சார்பிலும் தலா ஒருவர் என குழுவில் இடம்பெறுவர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கூட்ட நெரிசல் காலங்களில் தங்கும் வசதியைத் தர தேவஸ்தானம் வித்தியாச முயற்சி!
ஏற்கனவே, எதிர்க்கட்சித் தலைவர்கள் மணிப்பூருக்கு செல்ல முடிவுச் செய்திருந்த நிலையில், அங்குள்ள பதற்றமான சூழலைக் காரணம் காட்டி, அரசு அனுமதி மறுத்திருந்தது. எனினும், காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, மணிப்பூர் சென்று நேரில் பார்வையிட்டு, கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.