
ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான சராசரி கொண்ட வீரர் என்ற பெயரை தீபக் ஹூடா பெற்றுள்ளார்.

பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்காக விளையாடி வரும் தீபக் ஹூடா, நடப்பு சீசனில் 11 போட்டிகளில் விளையாடி, 69 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அவரது சராசரி 6.90 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 89.61 ஆகவும் உள்ளது.
ஏழு இன்னிங்ஸில் அவர் ஒற்றை இலக்கத்திலேயே ரன் எடுத்துள்ளார். அவரது ஃபாம் குறித்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், லக்னோ நிர்வாகம் வரும் போட்டிகளில் வேறு வீரருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்திய கிரிக்கெட் அணிக்காக 10 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள தீபக் ஹூடா, 153 ரன்களையும், 21 டி20 போட்டிகளில் விளையாடி 368 ரன்களையும், 106 ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி 1,305 ரன்களையும் எடுத்துள்ளார்.
மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது லக்னோ!
வலது கை பேட்டிங் மற்றும் வலது கை பந்து வீச்சு என ஆல் ரவுண்டராகவும் தீபக் ஹூடா விளையாடி அசத்தியுள்ளார்.


