Homeசெய்திகள்விளையாட்டுஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது கொல்கத்தா அணி!

ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி 3வது முறையாக கோப்பையை கைப்பற்றியது கொல்கத்தா அணி!

-

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 10.3 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

17வது ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதில் பிளே ஆப் சுற்றுகளானது கடந்த மே 19ம் தேதி முடிவடைந்தது. இதனைத்தொடர்ந்து குவாலிபையர் 1ல் கொல்கத்தாவும் மற்றும் குவாலிபையர் 2வில் ஐதராபாத் அணியும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறின. சென்னை சேப்பாக்கத்திலுள்ள எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்றிரவு 7.30 மணிக்கு நடைபெற்ற இறுதிப்போட்டியில் ஸ்ரேயர்ஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகளும் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனைத்தொடர்ந்து கொல்கத்தா அணி பந்துவீசியது.. ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட்டும் ரன் ஏதுமின்றியும் அபிஷேக் ஷர்மா 2 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய ராகுல் திரிபாதி 9 ரன்களிலும் ஏய்டன் மார்க்ராம் 20 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அணியின் அதிகபட்சமாக பேட் கம்மின்ஸ் 24 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் அணியானது 18.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. பந்துவீச்சு தரப்பில் ஆந்தரே ரஸ்செல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

பின்னர் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் கொல்கத்தா அணி இரண்டாவது பேட்டிங் விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சுனில் நரேன் 6 ரன்களிலும் ரமனுல்லா குர்பாஸ் 39 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் 52 ரன்களிலும் ஸ்ரேயர்ஸ் அய்யர் 6 ரன்களும் எடுத்து அணியை வெற்றிப்பாதைக்கு வித்திட்டனர். இறுதியில் அணியானது 10.3 ஓவர்களில் 114 ரன்கள் எடுத்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக மிட்செல் ஸ்டார்க் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3வது முறையாக ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது. இதற்கு முன்பு கடந்த 2012, 2014 ஆண்டுகளில் கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த சீசனில் தொடர் நாயகனாக சுனில் நரேன் தேர்வு செய்யப்பட்டார்.

 

 

MUST READ