Homeசெய்திகள்விளையாட்டுபாரிஸ் ஒலிம்பிக் - இரட்டையர் டென்னிஸ் அணி அறிவிப்பு

பாரிஸ் ஒலிம்பிக் – இரட்டையர் டென்னிஸ் அணி அறிவிப்பு

-

- Advertisement -
kadalkanni

பாாிஸ் ஒலிம்பிக்  போட்டியில் ஆண்கள் டென்னிஸ் இரட்டையா் பிரிவில் பங்கேற்க இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸ் ஒலிம்பிக் - இரட்டையர் டென்னிஸ் அணி அறிவிப்புஒலிம்பிக் போட்டி அடுத்த மாதம் 26 ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் ஆண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் பங்கேற்க இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக தரவரிசை பட்டியலில் நான்காம் இடத்தில் உள்ள ரோகன் போபண்ணா, தரவரிசை பட்டியலில் 67-வது இடத்தில் உள்ள தமிழ்நாடு வீரா் ஸ்ரீராம் பாலாஜி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ரோகன் போபண்ணா மற்றும் ஸ்ரீராம் பாலாஜி ஆகியோர் சமீபத்தில் நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் போட்டியில் வெவ்வேறு இணையுடன் இணைந்து நேருக்கு நேர் மோதியது குறிப்பிடத்தக்கது.

 

MUST READ