
பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற இன்றைய போட்டியில் வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்குகிறது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. 13 ஆட்டங்களில் விளையாடி 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி மோசமான சாதனையைப் படைத்த தீபக் ஹூடா!
இந்த நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர்பின் 67வது லீக் போட்டி, இன்று (மே 20) பிற்பகல் 03.30 மணியளவில் டெல்லியில் உள்ள அருண்ஜெட்லி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது.
குறிப்பாக, கடைசி லீக் ஆட்டத்தில் வெற்றி பெறும் முனைப்பில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எதிர்கொள்கிறது. டெல்லி அணியிடம் தோல்வி அடைந்தால் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறும் நிலை ஏற்படலாம்.
68 லீக் போட்டி இன்று (மே 20) இரவு 07.30 மணிக்கு ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில், லக்னோவின் வெற்றி, தோல்வியைப் பொறுத்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிலை மாறலாம்.
பஞ்சாப் அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் அணி அபாரம்!
15 புள்ளிகளுடன் லக்னோ அணி புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


