
ஹைதராபாத்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டம் பார்வையாளர்களின்றி நடைபெறும் என பி.சி.சி.ஐ. அறிவித்திருக்கிறது.

“கூட்டணி முறிவு- யாரும் கருத்து கூற வேண்டாம்”- பா.ஜ.க. தலைமை உத்தரவு!
வரும் செப்டம்பர் 29- ஆம் தேதி அன்று தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பயிற்சி போட்டி நடைபெறவுள்ளது. உள்ளூர் திருவிழா காரணமாக, பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து, ஆலோசனை நடத்தியதாகவும், அதன் பேரில் பாதுகாப்புக் காரணங்களுக்காகப் போட்டியைப் பார்க்க, ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
அதேநேரம், போட்டியைப் பார்க்க ஏற்கனவே முன்பதிவு செய்த ரசிகர்களுக்கு உரியத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் 50 ஓவர் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி, வரும் அக்டோபர் 05- ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளன.
அ.தி.மு.க.- பா.ஜ.க. கூட்டணி முறிவு- தலைவர்கள் கருத்து!
இதனையொட்டி, வரும் செப்டம்பர் 29- ஆம் தேதி முதல் பயிற்சி ஆட்டங்கள் நடைபெறவுள்ளதால், ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.