Homeசெய்திகள்விளையாட்டுஇறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை அணி?

இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை அணி?

-

- Advertisement -

 

இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா சென்னை அணி?
Photo: Chennai Super Kings

சென்னையில் உள்ள எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் (MA Chidambaram Stadium) இன்று (மே 23) இரவு 07.30 மணிக்கு நடைபெறும் பிளே ஆஃப் சுற்றின் முதலாவது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

புழல் ஏரிக்கு பூண்டி ஏரியிலிருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம்

இந்த போட்டியில் வெற்றிப் பெறும் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு செல்லும். தோல்வி அடையும் அணி வெளியேறுதல் சுற்றில் வெற்றி பெறும் அணியுடன் இரண்டாவது தகுதிச் சுற்றில் விளையாட வேண்டும். சொந்த மண்ணில் விளையாடும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு செல்லுமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

குறிப்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று 10வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் கால் பதிக்குமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றனர். லீக் சுற்றில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 வெற்றியும், 5 தோல்வியும், குஜராத் டைட்டன்ஸ் அணி 10 வெற்றியும், 4 தோல்வியும் பெற்றன.

பிளே ஆஃப் போட்டி- பயணச்சீட்டு கட்டாயம்: மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவிப்பு!

கடந்த 2010, 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல். கிரிக்கெட் கோப்பையை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ