spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்விளையாட்டுஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி!

ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி!

-

- Advertisement -

 

ஹைதராபாத் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி!
File Photo

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 65வது லீக் போட்டி, நேற்று (மே 18) இரவு 07.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி.

we-r-hiring

பஞ்சாப் அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி அபாரம்!

டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 186 ரன்களை எடுத்தது. அந்த அணி தரப்பில் அதிகபட்சமாக, ஹெய்ன்ரிச் கிளாசென் 104 ரன்களையும், ஹாரி ப்ரூக் 27 ரன்களையும் எடுத்துள்ளார்.

187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 187 ரன்களை எடுத்து வெற்றி இலக்கை எட்டியது. இதனால் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி அபார வெற்றி பெற்றது.

ஐ.பி.எல். போட்டிகளில் விளையாடி மோசமான சாதனையைப் படைத்த தீபக் ஹூடா!

பெங்களூரு அணி தரப்பில் விராட் கோலி 100 ரன்களையும், டூ பிளஸில் 71 ரன்களையும் எடுத்துள்ளனர்.

இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளுடன் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது.

MUST READ