ஸ்பெயின் ஸமோரா மாகாணத்தில் நடந்த கார் விபத்தில் பிரபல கால்பந்து வீரர்கள் 2 பேர் உயிரிழந்துள்ளனர். போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து வீரரான டியாகோ ஜோட்டா (28) இங்கிலாந்தின் லிவர்புல் அணிக்காக விளையாடி வந்தாா். இவர் சர்வதேச அளவிலான 50 கால்பந்து போட்டிகளில் விளையாடியுள்ளாா். ஸ்பெயினின் ஸமோரா மாகாணததில் லம்போர்கினி காரில் டியாகோ ஜோட்டா (28) மற்றும் அவரது சகோதரர் ஆன்ட்ரூ சில்வா(26) சென்றபோது எதிர்பாரத விதமாக டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையில் இருந்து விலகி மற்றொரு கார் மீது மோதி தீப்பிடித்தது விபத்து ஏற்பட்டது. இதின் விளைவாக சம்பவ இடத்திலேயே இருவரும் பலியாகினர்.சில நாட்களுக்கு முன்பு தான் டியாகோ ஜோட்டாவிற்கு திருமணம் முடிந்துள்ளது. இச்சம்பவம் கால்பந்து ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு இன்று மாலை வெளியாகும் என எதிர்பார்ப்பு…