
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் சுப்மன் கில், சென்னையில் இருந்து அகமதாபாத் புறப்பட்டுச் சென்றாலும், அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்குவாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

அலிப்பிரியிலிருந்து திருப்பதிக்கு பாதயாத்திரையாகச் சென்ற இயக்குநர் லோகேஷ் கனகராஜ்!
உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியில் விளையாட சென்னை வந்திருந்த போது, சுப்மன் கில்லுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியான நிலையில், மருத்துவக் குழுவினர் சிகிச்சை அளித்து வந்தனர். இதனால் ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்கவில்லை.
சுப்மன் கில் சென்னையிலேயே தங்கிச் சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த சூழலில் சென்னையில் இருந்து விமானம் மூலம் சுப்மன் கில், அகமதாபாத் புறப்பட்டுச் சென்றார். அங்கு வரும் அக்.14- ஆம் தேதி அன்று இந்தியா- பாகிஸ்தான் போட்டி நடைபெறவுள்ளது.
‘இந்தியர்களை மீட்க இஸ்ரேலுக்கு விரைகிறது சிறப்பு விமானம்’- மத்திய அரசு அதிரடி நடவடிக்கை!
சுப்மன் கில் காய்ச்சல் பாதிப்பில் இருந்து குணமடைந்தாலும், பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் அவர் பங்கேற்பது சந்தேகம் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம், சுப்மன் கில் அகமதாபாத் புறப்பட்டு சென்றதால், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


