Homeசெய்திகள்விளையாட்டுடி20 தொடரை வென்று இந்திய அணி அசத்தல்!

டி20 தொடரை வென்று இந்திய அணி அசத்தல்!

-

 

டி20 தொடரை வென்று இந்திய அணி அசத்தல்!
Photo: BCCI

அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பும்ரா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டி20 கொண்ட தொடரில் விளையாடியது. அயர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் நடைபெற்ற இரண்டு டி20 போட்டிகளிலும் இந்திய அணி, அயர்லாந்து அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

செய்திகளை உடனுக்குடன் WhatsApp செயலியில் பெற

‘ஆசியக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு’- அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் யார்? யார்?

அதைத் தொடர்ந்து, மூன்றாவது டி20 போட்டி, நேற்று (ஆகஸ்ட் 23) நடைபெற்ற நிலையில், தொடர் மழை காரணமாக, அந்த போட்டி ரத்துச் செய்யப்பட்டது. இதனால் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

வெற்றியைத் தீர்மானிக்க நாளை டை பிரேக்கர்!

இதையடுத்து, இந்திய அணி கோப்பையுடன் தாயகம் திரும்பியுள்ளது. பெங்களூருவில் உள்ள மைதானத்தில் நடைபெறும் ஆசியக் கோப்பைக்கான பயிற்சியில் வீரர்கள் பங்கேற்கின்றனர். ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஆகஸ்ட் 30- ஆம் தேதி தொடங்கும் நிலையில், செப்டம்பர் – 2 ஆம் தேதி அன்று இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ