இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ள இந்திய கிரிக்கெட் அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்தைத் தக்க வைத்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.
எலும்புகளை பலப்படுத்த சில டிப்ஸ்!
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்த போதும், அடுத்த நான்கு போட்டிகளிலும் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களைத் திணறச் செய்த பந்து வீச்சாளர்கள் வெற்றிக்கு முக்கிய காரணமாகினர். பேட்டிங்கில் மூத்த வீரர்கள் பெரிதாக ஜொலிக்காத போதும், இளம் வீரர்களும், புதுமுக வீரர்களும் அணியின் வெற்றிக்கான ரன்களை சேர்த்துக் கொடுத்தனர்.
பேட்டிங், பந்து வீச்சு என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரை 4- 1 என்ற கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த அபார வெற்றியின் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் 122 புள்ளிகள் எடுத்து ஆஸ்திரேலியா அணியை பின்னுக்கு தள்ளி இந்திய அணி முதலிடத்திற்கு முன்னேறி உள்ளது.
ஆஸ்திரேலிய அணி 117 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்கிலாந்து அணி 111 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் நீடிக்கிறது. ஏற்கனவே, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.