Homeசெய்திகள்விளையாட்டுடி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர்: முதலாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்Vsகோவை கிங்ஸ் அணிகள் இன்று...

டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர்: முதலாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்Vsகோவை கிங்ஸ் அணிகள் இன்று மோதல்

-

- Advertisement -

டி.என்.பி,எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதலாவது லீக் ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ்Vsகோவை கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை நடத்துகினறன.

8வது டி.என்.பி.எல் கிரிக்கெட் போட்டி சேலத்தில் இன்று தொடங்குகிறது. இதில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ஒரு முறை சாம்பியன் பட்டம் வென்ற கோவை கிங்ஸ் அணிகளும் இன்று பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் பாபா அபராஜித் தலைமையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியும் ஷாருக்கான் தலைமையில் கோவை கிங்ஸ் அணிகளும் இன்று மோதுகின்றன. இப்போட்டியானது சேலம் அருகே வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு ஆட்டமானது தொடங்குகிறது.

இரு அணிகளும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 6 முறை சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிகளும் 3 முறை கோவை கிங்ஸ் அணிகளும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவில்லாமல் போனது. இரு அணிகளும் சரிசம பலத்துடன் இருப்பதால் முதலாவது வெற்றியை பெற கடுமையாக முயற்சிக்கும் என்பதால் இந்தாட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

 

 

MUST READ