Homeசெய்திகள்விளையாட்டுமழையால் போட்டி டிரா- தொடரை வென்றது இந்தியா!

மழையால் போட்டி டிரா- தொடரை வென்றது இந்தியா!

-

- Advertisement -

 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி மழையால் டிரா ஆனதால் இந்திய அணி தொடரை வென்றது.

“ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!

மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி, இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது போட்டி மழையால் டிரா ஆனது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி 438 ரன்களும், மேற்கிந்தியத் தீவுகள் அணி 255 ரன்களும் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 2 விக்கெட்டுகளை இழந்து 181 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. 365 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி நான்காம் நாள் ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 76 ரன்களை எடுத்தது.

பா.ஜ.க. குறித்து நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம்!

போட்டியின் ஐந்தாவது நாளில் மழை குறுக்கிட்டதால் ஆட்டத்தைத் தொடர முடியாமல் டிரா செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடைசி மற்றும் இரண்டாவது போட்டி டிரா ஆனதால் 1-0 என்ற கணக்கில் இந்திய அணி தொடரை வென்றது.

MUST READ